பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 திருக்குறட் குமரேச வெண்பா அறிவில் பரந்த விடயமய மாகும் உலகம் தோன்ருமல் பிறவித் துயரக் கடல்கடந்து பேரின் பம்சார் குவர்என்று. (பிரபுவிங்கலிலை, 11, 18) மனம் பொறி வழி வெளியே திரியின் இழிதுயரே விண்யும்; அடங்கி அகமுகமாயின் சிவானந்தமாம் என்னும் இது இங்கே உன்னி யுணர வுரியது. பிறவிக் துயரம் நீங்கிப் பேரின்பம் பெற வுரிய வழி செறியே புலன் அடங்கி கிலை யுயர்ந்து வருதலேயாம். எழுந்துஎழுந்து சிறுகின்ற இந்திரியப் பாம்புகளே இதயம் தன்னில் அழுந்துவிவே கத்தடியால் வச்சிரம்கொண்டு இந்திரன் வெற்பு அடர்வது என்ன விழுந்திடமோ துறவேண்டும் சாந்தியில்ை சமம்மேவி இடர் தீர் நெஞ்சம் முழுந்துசுக வடிவாம்தற் பதகிலேயைப் பெறுமிதுவே முத்தி என்ன. (ஞானவாசிட்டம்) இந்திரியப் பாம்புகண் விவேகத் தடியால் அடித்து வீழ்த்த வேண்டும். அப்பொழுது அந்த உள்ளத்தில் சாக்தி யுண்டாம்; அவல நிலைகள் அடியோடு அழியும்; இடர் நீங்கிப் போம்; சுகம் ஓங்கி வரும்; அது வேபேரின்ப முத்தியாம் என இது கூறியுளது குறிப்புகளைக் கூர்ந்த ஒர்க்க தேர்ந்து கொள்ள வேண்டும். பொறிகளை அடக்கியிருப்பவன் அரிய பல மகிமைகளை அடைந்து அதிசய நிலைகளில் உயர்க்க உலகம் வியந்து தொழ விளங்கிகிற்கின்ருன். இவ்வுண்மைவால்மீகி பால் அறிய வந்தது ச ரி தம். இவர் வேடர் மரபினர். கங்காநதி யருகே காடகம் என் லும் ஊரில் இருந்தவர். அஞ்சா கெஞ்சினர்; வஞ்சம் இல்லாத வர்; உறுதி ஊக்கங்கள் உடையவர் ஆயினும் நல்ல அறிவு நலம் மருவாமையால் பொல்லாத வழிகளிலேயே புலையாய்த் திரிந்தார். வழிப்பறி களவுகளைச் செய்து மனைவி மக்களைப் பேணி இவர் வாழ்க்கையை கடத்தி வந்தார். அவ்வாறு வருங்கால் ஒருநாள் கானகத்தில் ஒரு யோகசித்கரைக் கண்டார். இவரது நேர்மை கிலேயையும், நிலைதிரிக்க உழலும் புலையையும் உணர்ந்து அப் பெரியவர் இங்கினர். அருள் புரிக்க அறிவுரைகள் பகர்ந்தார்.