பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. அடக்கமுடைமை 589 தருமன் உரைத்தது. வயிரம் எனும் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர் வரைக்கா டென்னச் செயிரமரில் வெகுளிபொரச் சேர இரு திறத் தேமும் சென்று மாள்வோம் கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருகாட்டில் கலந்து வாழ உயிரனேயாய்! சந்துபட உரைத்தருள் என் ருன்அறத்தின் உருவம் போல் வான். (1) (பாரதம், கிருட்டிணன் துரது) இந்த உரைகளால் இவனுடைய உள்ள கிலைகளை உணர்ந்து கொள்ளுகிருேம். கோபம் செ ாடிய செருப்பு; அதற்கு இடங் கொடுத்தால் குடிகேடு விளக்க விடும் என்று இவன் இங்கே கூறியிருத்தலால் அதனே எவ்வாறு கருதிக் காக்க வந்துள்ளான் என்பது கெரிய நின்றது. அறத்தின் உருவம் போல்வான் என்று ஈண்டு இவனைக் குறித்திருப்பது கூர்ந்து சிக்கிக்கவுரியது. கதம் காத்துக் கற்று அடங்கினவனிடம் அறம் உவந்துவந்து தங்கும் என் பதை உலகம் கான இவன் தெளிவா நன்கு உணர்த்திகின் முன். அடங்கி ஒழுகும் அவன்பால் அறங்கள் அடங்கி மகிழும் அமர்ந்து. கற்று அடங்குக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. அடக்கம் மனிதனேத் தேவன் ஆக்கும். உயிர்க்கு அது உயர்ந்த ஆக்கம். அதனே யுடையவர் உயர் மகிமை அடைவர். உலகம் புகழ ஒளி மிகுந்து கிற்பர். செல்வர்க்கு அடக்கம் சீரிய செல்வம். அதல்ை எழுமையும் இன்பமாம். நாவின் அடக்கம் நலம் பல தரும், வாய்மொழி வழுவின் வன் பழி விளேயும், திய சொல் தீயினும் தீயது. அறிவுடன் அடங்கின் அரிய புண்ணியம். காட்-வது அடக்கமுடைமை முற்றிற்று.