பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுன்காவது அதிகாரம். ஒழுக்கம் உடைமை அஃதாவது நெறிமுறையே ஒழுகும் நீர்மை, மனம் மொழி மெய்களை நல்ல வழிகளில் அடக்கி நலமா ஒழுகி வந்தவர்க்கே இது இனமா இனிது அமையும் ஆதலால் அடக்கமுடைமையின் பின்அமைந்த கின்றது. அடக்கமும்,ஒழுக்கமும்ஆன்மஉறவுகள். 131. ஏனே தசரதனர் இன்னுயிரை நீத்தும்தம் கோனெழுக்கம் காத்தார் குமரேசா-மான ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும். (க) இ-ள். குமரேசா தனது இனிய உயிரை விடுக்கம் கசரதன் ஒழுக் கத்தை ஏன் புனிதமாப் பேணினன்? எனின், ஒழுக்கம் விழுப் பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்க. ஒழுக்கம் எல்லார்க்கும் உயர்ந்த சிறப்பினைக் கருதலான் அதனை உயிரினும் உயர்வாகப் பாதுகாக்க வேண்டும் என்பதாம். ஒழுக்கமும் உயிரும் இங்கே காட்சிக்கு வந்துள்ளன ஒரு மனிதன் பிரியமாப் பேணி வருகிற பொருள்களுள் மனைவி மக்கள் செல்வம் முதலியன சிறக் தள்ளன. கன் உயிர் இன்பமாப் வாழ்ந்த வரவே அவற்றை அன்பா அவன் ஆதரிக்க வருகிருன். ஆகவே புறக்கே சூழ்ந்துள்ள எவ்வகைப் பொருளி னும் அகத்கேயுள்ள தன் உயிரையே எவனும் ஆவலோடு ஒம்பி அருமையாக் கருதி வருவதை பாண்டும் அறிக்க வருகிருேம். யாரும் எவ்வழியும் ஆர்வமாய்ப் பேணி வருகிற அவ்வுயிரி னும் ஒழுக்கம் பாண்டும் செவ்வையா ஒம்பவுரியது என ஈண்டு உறுதியா வலியுறுத்தி நாயனர் தெளிவா உணர்த்தியுள்ளார். அரிய இனிய உயிரினும் மிகவும் பிரியமாக ஒழுக்கத்தை ஏன் பேண வேண்டும்? என்பதற்குக் காரணத்தை ாயமாக் காட்டியிருக்கிருர், சீவனைத் தேவன் ஆக்கும் தேவ அமுதமாய்ச் ஒலம் மேவியுள்ளது. அவ்வுண்மையை முன்னகா விளக்கியது,