பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 திருக்குறட் குமரேச வெண்பா வக்கது. மேன்மையான ஆன்ம ஒளியைப் போற்றிவரின் மெய் யான பேரின்பம் நேரே பெருகிச் சீரோடு வருகிறது. உயிரினும் உயர்வாக ஒழுக்கம் பாதுகாக்கத் தக்கது என் பார் ஒம்பப்படும் என்ருர். இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான சொல்லால் குறித்திருப்பது கூர்க்க உணர வுரியது. வேறில்லை உண்டுயார் வேண்டும் தகும்படும் வினேபெயர் எச்சம் வியங்கோள் பத்தும் கிணேபால் இடம்எலாம் செல்லும் என்ப. (இலக்கணக்கொத்து) படும் என்னும் சொல் பயன் படுவதை இதில் அறிந்து கொள்கிருேம். இயல்விதி செயலை நயமாத் தெரியச் செய்கிறது. விழுப்பம் எய்தி ஒழுக்கியல்பு ஒம்பி. (பெருங்கதை, 2-11) ஒழுக்கமும் ஒம்பலும் விழுப்பமும் இதில் வந்தள்ளன. விழுப்பமும் கேள்வியும் மெய்கின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கினற போது வழுக்கி விடாவிடில் வானவர் கோனும் இழுக்கினறி எண்ணிலி காலம தாமே. (திருமந்திரம், 505) ஒழுக்கம் உறின் விழுப்பம் முதலியன உளவாம்; பரம னருளும் வரும் எனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிருர், பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு கிலக்கிழமை மீக்கூற்றம் கல்விகோ யின்மை இலக்கணத்தால் இவ் எட்டும் எய்துப என்ப ஒழுக்கம் பிழையாதவர். (ஆசாரக்கோவை, 21 ஒழுக்கத்தை வழுவாமல் ஒம்பிவருபவர்க்கு வருகிற சிறப்பு களை இது தொகையா விளக்கியுளது. சிறந்த ஊ தி ய ங் க ள் விளைந்து வரும் என்ற கல்ை ஒழுக்கத்தின் உயர்க்க நீர்மையை உணர்ந்த உறுதி கலங்களையும் தெளிந்த கொள்கிருேம். நீதிநெறியே ஒழுகி வருவத ஒழுக்கம் என வந்தது. ஆசாரம் லேம் நடை எனவும் மேலான காரணம் மருவிய பெயர்கள் உள. சரியை ஆசாரம் கடைஇயல்பு ஒழுக்கம். (பிங்கலங்தை) ஒழுக்கத்தின் பேர்கள் இவ்வாறு அமைாதிருக்கின்றன. நல்ல நெறியில் கடந்த வருவது நடை என வந்தது. சரியான கிலையில் இயங்கி வருவது சரியை என நேர்ந்தது. இயற்கை கியமமா நேரே இசைக்த தோப்க்கது இயல்பு என எய்க்கது.