பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 திருக்குறட் குமரேச வெண்பா சத்தியம் கருணை முதலிய உத்தம சீர்மைகளைப் பேணி ஒழுகி வருபவர் உத்தமாாப் உயர்ந்து வருகிரு.ர். இனிய பான் மைகள் படிந்துவர ஆன்மா புனித கிலேயில் ஓங்கி மிளிர்கின்றது. தயவுநற் பொறுமை யுள்ளம் தனிலழுக் காறிலாமை இயல்சுசி கிலேசம் இன்மை இயையுகற் சுபவாசாரம் பயனுறும் ஈகையோடும் பார்பொருள் பரதாரங்கள் கயவினே வெறுத்தல் எட்டும் ஆன்மாற்குணமே யாமால். (மச்சபுராணம், கருமயோகம், 8) மேன்மையான ஆன்ம குணங்களே இது வரைந்து காட்டி யுளது. இத்தகைய நல்ல நீர்மைகளோடு பழகிவருவதே ஒழுக்க மாம். உயிர்வாழ்வை எவ்வழியும் உயர்த்தி இன்பம் தருவதால் சிலமே சிவனுக்குச்செவ்விய துணையாத் திவ்வியநிலை.அருள்கிறது. ஒழுக்கத்தை உறுதியாப் பேணிக் காப்பவர்உயர்ந்து விளங் குகின்ருர்.இவ்வுண்மையைக்கசனும்விசயனும்காட்டிகின்றனர். ச ரி தம். கசன் என்பவன் தேவ குருவாகிய வியாழன் புதல்வன். பேரழகன். அரிய கலைகள் பலவும் கற்றவன். அறிவும் சிலமும் அமையப் பெற்றவன். ஒருமுறை இவன் மிருதசஞ்சீவினி னன் லும் விஞசையைக் கற்க விரும்பி அசுரகுருவாகிய சுக்கிரனை அடைந்தான். அந்த வெள்ளியின் உள்ளம் மகிழும்படி பணிகள் பல புரிந்து பணிந்து நடந்து வந்தான். இவன் வந்துள்ள வரவை அறிந்து தானவர் சிங்தை திரிக்கார்; அல்லல் பல புரிக்கார்; முடி வில் கொல்லவும் துணிக்கார். வானவர் வாழ்வுற உபாயம் சூழ்ந்த உற்றுள்ளான் என உள்ளம் கோடினமையால் அசுரர் இவனை அழிவு செய்ய நேர்ந்தார். அந்த அழிதுயரங்களை எல் லாம் அரசை என்னும் பருவமங்கை பக்குவமா நீக்கியருளினுள். அவள் சுக்கிரனுடைய அருமை மகள். அறிவும் அ ழ கு ம் மருவிய அவள் இவனைக் கண்டது முதல் காதல் கொண்டு காலம் கருதி யிருந்தாள் ஆகலால் இவனுக்கு உற்ற அழிவுகளை எல்லாம் வழியோடு நீக்கியருளினுள். அவளது வேண்டுகோ வளின்படியே தந்தையும் அந்த அமுக மந்திரத்தை இவன் சிக்கை தெளியத் தந்தான். கருதி வந்த கலை கை வங்கமையால் குருவினி டம் விடைபெற்று இவன் மீள சேர்ந்தான். அந்த அழகி தனியே