பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் உடைமை 603 ஒழுக்கம் உடையவன் உயர்ந்த குலமகன் ஆகிருன்; அதனே இழக்கவன் இழித்த பிறப்பினய்ைக் கழித்து போகின்ருன். உடைமை என்றது அரிய பெரிய செல்வம் என்பது கெரிய, கன்னேயுடையானே உன்னத நிலையில் உ பர்த்தியருளும் தெய்வ கிதியாயப் ஒழுக்கம் உப்தியமைந்து உறுதி தோப்க் துள்ளது அவ்வுண்மையை துண்மையா உணர உடைமை என்ருர், குடிமை என்றது தலைமையான நிலைமையுடைய குலன. குண நலம் உடையார் கூடியுள்ள குடி பீடும் பெருமையும் பெற்று எவ்வழியும் யாவரும் புகழ்ந்து போற்ற வருகிறது. ஒத்த பிறப்பினே யுடைய மக்களுள் சிலர் உயர் குலத்தவர் என ஒளி மிகுந்துள்ளனர். அக்க உயர்வு அவர்க்கு எந்த வகை யால் வக்க த? இதனைச் சிந்தனை செய்து தேர்ந்து தெளிய வேண் ம்ெ. ஒர்க்க உணரும் அளவு உண்மை கெரிய வருகிறது. செல்வம் கல்வி அதிகாரம் முகலியன உயர்கிலைக்குக் கார னங்கள் ஆயினும் ஒழுக்கமே அவற்றுள் தலைமையாய் நிலவி யுளது. சீலத்தால் உயர்ந்தவரை ஞாலக்கார் எவரும் இயல்பாக வே தலைவணங்கி உயர்வான உரிமையோடு கொழுகின்ருர். ஒழுக்கத்தால் விழுமிய மேன்மைகள் விளைந்து வருகலால் அதனே உடையவர் உயர்க்க குல கிலேயராப் ஒளி சிறந்த வருகின் முர். “ஒழுக்கம் விழுப்பம் தரலான்” (குறள் 131) எனத் தேவர் முகவில் குறிக்கத அதன் உயர் கிலைகளே எல்லாம் ஒர்ந்து உன ரவே. அரிய மகிமைகள் யாவும் ஒழுக்கத்தால் அமைகின்றன. "விழுப்பமொடு பிறந்த விறுயர் தொல்குடி ஒழுக்கம் காணிய உரைத்ததை." (பெருங்கதை,1-84) விழுப்பமான குடிக்கும் ஒழுக்கத்துக்கும் உள்ள உறவுரிமையை உதயண மன்னன் இன்னவாறு நன்னயமாக் கருதியிருக்கிருன். இனிய கீர்மை தோப்க்கது சீர்மையான குடிமையாம்; அக் குடிப் பிறப்பு உயர் குலச் சிறப்பாய் ஒங்கி வருகின்றது. பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு கிறுத்த காம வாயில் கிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே, (கொல்காப்பியம்)