பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 திருக்குறட் குமரேச வெண்பா கோடியிடர் நேர்ந்தாலும் கொண்ட ஒழுக்கத்தைப் பீடுடையார் நீங்கார் பிறழ்ந்து. இழுக்கு கேராமல் ஒழுக்கம் ஒம்புக. 187. வீடாத மேன்மையுற்ற வெண்மதியும் வெம்பழியைக் கூடினன் என்னே குமரேசா-கூடும் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. (er) இ-ள். குமரேசா உயர்ந்த மேன்மையாயிருக்க சந்திரன் ஒர் இழுக் கத்தால் ஏன் பழிபடிக்க இழிந்தான்? எனின், ஒழுக்கத்தின் மேன்மை எய்தவர்; இழுக்கத்தின் எ ப்தாப்பழி ன ப்தவர்என் க. ஒழுக்கத்தால் மாக்கர் உயர்ந்த மேன்மைகளை அடைவர்; இழுக்கத்தால் இழிக்க அடாப் பழிகளை எப் அவர் என்பதாம். மனிதன் நெறிமுறையே ஒழுகி வருவது ஒழுக்கம் என வங் தது. அதனல் மேலான நன்மைகள் உளவாகின்றன; விழுமிய அக்க ஒழுக்க கிலையை விலகின் அது இழுக்கமாப் இழிதீமைகளை வினைத்து விடுகின்றன. இழிவு நேராமல் வாழ்வதே வாழ்வாம். மேன்மை = மேலான தலைமை. னவரும் உயர்வா மதித்த ப் போற்றும் மகிமையே மேன்மையாம். இக்க மேம்பாடு ஒழுக் கத்தால் உண்டாம் என்றது, அதனை ஒம்பி மனிதன் உயர்ந்து வர. மேலான புகழ் கண் யாவரும் விரும்புவர்; கீழான பழிகளை எவரும் வெறுப்பர். இனிய மாண்புகள் சிலத்தால் எய்தம் ஆக லால் அதனைப் பேணி வருபவர் பெருமைகனைப் பெற்று மகிழ் கின்ருர், பேணுத இழக்கவர் சிறுமையாளராப் இழிந்து சீரழிந்த கழிகின்றனர். அரிய சீலம் பெரிய நிலையை அருளி வருகிறது. ஒழுக்கம் கழுவிய பொழுதே அந்த மனிதன் உயர்ந்த மகா ஒப் ஒளிபெறுகின்ருன்; அதனை வழுவினவன இழி பழியாளன பிழிக்க அழிதுயரங்களையே அடைகிருன். இழுக்கம் இழிமகளுக் கிப் பழி தயர்களில் ஆழ்த் தம் ஆகலால் அது படியாதபடி பாது காத்த ஒழுகுக. கடை பழுதால்ை எடை குறைக்க இழிவாம்.