பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 திருக்குறட் குமரேச வெண்பா பிறனுடைய மனைவியை விழைவதே அறம் கடக்க அழி செயல் என இராமன் இவ்வாறு வாலியை நோக்கி நீதியைச் செவ்வையா வலியுறுத்தியுள்ளான். வீரம் எது? கருமம் எக? என்னும் மருமங்களை இங்கே விசயமா விளக்கி யிருக்கும் அழகை விவேகமா நுனித்து உணர்ந்து கொள்ள வேண்டும். அறனும் அறனறிந்த செய்கையும் சான்ருேர் திறனுடையன் என்றுரைக்கும் தேசும்---பிறனில் பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல் இழுக்காம் ஒருங்கே இவை. (அறநெறிச்சாரம்) அறம் முதலிய மேன்மைகள் யாவும் பிறனில் விழைவு ஒன் ருல் அடியோடு பாழாப் அழியும் என இது தெளிவுறுத்தியுளது. காரம் கொண்டார் காடுகவர்ந்தார் கடையல்லா வாரம் கொண்டார் மற்ருெருவர்க்காய் மனே வாழும் தாரம் கொண்டார் என்றிவர்தம்மைத் தருமம்தான் ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவரையா! (1) அங்காமுற்ருன் அகலிகை பொம்பால் அழிவுற்ருன் இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்ருர் செந்திரு ஒப்பார் எத்தனையோர்கின் திருவுண் பார் மங்திரம் அற்ருர் உற்ற துரைத்தாய் மதியற்ருய்! (2) செய்த யேனும் தீவினேயோடும் பழி அல்லால் எய்தாது எய்தாது; எய்தின், இராமன் உலகின்ருன் வைதால் அன்ன வாளிகள் கொண்டும் வழியோடும் கொய்தான் அன்றே கொற்றமுடித்துன் குழவெல்லாம். (3) (இராமா, மாரீசன்) சீதையை விழைக்க வங்க இராவணனுக்கு மாரீசன் இவ் வா.மு புத்திமதிக ளேப் போதித்திருக்கிருன். பரதாரத்தை விரும்பி ல்ை தருமம் ஈரும்; பழிபாவங்கள்.நீளும்; அடியோடுஅழிவாய் என அவன் கூறியுள்ள குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிக்திக்கவுரியன. தமக்கு சேருகின்ற பழி துயரங்களை யாதம் உணராமல் மதிகேடராப் மதத்தத் திரியும் மடையர் என்பார் பேதையார் என்ருர் மையல் மயக்கம் வெப்ப துயரை விளக்கின்றது. உடலின் சிறுதினவுக்காக உயிரை அடர் நரகில் தள்ளும் அவகேடர் ஆதாால் பிறனில் விழைவார் பெரும் பேதைகள் என சேர்ந்தார். ஆன்ம நாசம் கேரே அறிய வந்தது.