பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பொறை யுடைமை 699 |l, கொன்ற மழுவோனைக் கொல்லாமல் ஏன்பொறுத்தான் குன்ரு இராமன் குமரேசா-கன்றி ஒறுத்தாரை ஒன்ருக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (டு) இ-ள். குமரேசா அரசர் மாபைக் கொன்ற பரசுராமனைக் கொல் லாமல் இராமன் என் பொறுத்தருளினன்? எனின், ஒறத்தாரை ஒன்ருக வையார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து _வப்பர் என்க. அங்கம் தங்கம் ஆகும் வழி அறிய வக்கது. பொறுத்தருளாமல் ஒறுத்தவரை உலகத்தார் ஒரு பொரு ளாக மதியார்; பொறுத்தவரைப் பொன்போல் பொதிக்க போற்றுவர். அரிய மகிமை பொறுமையால் வருகிறது. ஒறுத்தல்= தண்டித்தல், ஒருவன் செய்த பிழைக்கு ஒத்தபடி நேரே உறுத்து அடக்குவது ஒறத்தல் என வந்தது. ஒறுக்கும் தண்டித்து உறுசிறைக் கோட்டம். (மணிமேகலை, 19) ஒப்பநாடி அத்தகவு ஒறுத்தி. (புறம், 10) ஒட்டியிட்டு ஒஅறுக்கவும். (நீலகேசி, 104) ஒஅறுக்கும் மதுகை. (நாலடி, 65) ஒறுத்து ஆற்றின். (பழமொழி, 19) ஒறுத்து வானவர் புகழுண்ட பாரவில், (இராமா, முதல்போர், 192) இவற்றுள் ஒறுத்தல் குறித்திருக்கும் பொருளை அறிக. பொறுத்தவர் பொன்போல் உயர்ந்த ஒளி பெறுகின்ருர்; பொருது வெறுத்தவர் மண்போல் இழிந்து கழிகின்ருர். பொறுமை அரிய பண்பு ஆதலால் அதனையுடையவரை உலகம் பெருமையா மதித் தப் புக ழ் ங் த போற்றுகின்றது. அத்தகைய பொறையை இழந்தவரை உலகமும் இகழ்ந்துவிடு கின்றது. பொறுத்தவர்.பால் புகழ் பொங்கி வருகிறது. சிறுத்தவர்கள் அறியாமல் செய்தபிழை அத்தனையும் செவ்வியோய்ே