பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 கிருக்குறட் குமரேச வெண்பா பொருந்தி வாழ்தல் சயத்துறை என்றது எத்தனை வித்தக விசயம்! உய்த் துணர வேண்டும். அதிசய ஆற்றலுடைய இந்த ஆண் கை பாண்டும் பொறுமை பூண்டு வந்துள்ள அருமையை வியங் த யாவரும் புகழ்ந்த போற்றியுள்ளனர், பொறுத்தாாைப் பொன்போல் பொதிந்து வைத்த அன்போடு துதித்த உலகம் பேணிவரும் என்பது இக்குலமகனிடம் நலமாக் காண வந்தது. பொறுமையை பேணிவரின் புண்ணியஞ வீண்டே மறுமைகலம் காண்பாய் மகிழ்ந்து. பொறுத்து வருவாரை உலகம் போற்றிவரும், 156. வெற்றி அருணகிரி வில்லிசெவி கொய்யாதேன் குற்றம் பொறுத்தார் குமரேசா-பற்றி ஒறுத்தார்க் கொருகாளே இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். (சு) இ-ள். குமரேசா I அருணகிரிநாதர் வில்லியாழ்வாரை ஒ.அறுத்து ஒழிக்காமல் என் பொறுத்தருளினர்? எனின், ஒறத்தார்க்கு ஒருகாளை இன்பம் ; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் என்க. பொறையை ஊட்டப் புகழைக் காட்டிஞர். பிழை செய்தவரைக் கண்டித்தவர்க்கு ஒருநாள் அளவே சிறிய மகிழ்வு; பொறுத்தவர்க்கு வாழ்நாள் முழுவதும் பெரிய புகழ். பொன்ருத கீர்த்தி பொறுமைக்கு உரிமையாகிறது. பொறுத்தாரை உலகம் உவந்து போற்றும் என்று முன்பு குறித்தார்; இதில் அவர் உயர்ந்த புகழோடு பொலிக்க விளங்கு வார் என்கிரு.ர். பொறையால் விளக்க வரும் பலன்களைப் பல வகையிலும் விளக்கிவருவது, அதனைவிழைந்தபேணிவரவேயாம். பொன்றும் துணையும் என்ற த உடல் அழியும் அளவும், உலகம் ஒழியும் அளவும் என இருவகையும் மருவிப் புகழின் கிலே அறிய கின்றது. பிறர் பிழை பொறுத்தால் பெரும் புகழ் வரும் அரிய செயல்களால் புகழ் தோன்றுகின்றது; பொறுத்தல் மிகவும் பெரிய காரியம் ஆதலால் பெருங்கீர்த்தி அதற்கு மிகவும் உரிமையாகின்றது. ஆகவே கிலேயான புகழைப் பொறையாளர் கேரே அடைக்க கிலவி கிற்கிருர் என நிலைமையைத் துலக்கினர்.