பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 திருக்குறட் குமரேச வெண்பா பசித் துயரைப் பொறுத்துத் தவம் புரிவதிலும் பிறர் சொல் லும் வசை மொழிகளைப் பொறுத்து அமைதியுறுவது அரிய செயல்; பெரிய தவசிகளும் பேண முடியாத இந்த அரிய பொறு மையைப் பேணி வருபவர் அவரினும் .ெ ப. ரி ய ர் ஆகின்ருர்; ஆகவே அக்கப் பெருமையையும் அருமையையும் உரிமையோடு உணர அவர் இவர்பின் என்ருர், தவமு ம் பொறுமையும் மனிதரைத் தனி கிலையில் உயர்த்திப் புனிதர் என விளக்கிப் பெரியர் ஆக்கும்; ஆயினும் முன்னதினும் பின்னக மேலான சால்புடையது. பொறையுடைமை இறைவனுடைய தனி இயல்பு; அதனை உரிமையாக ஒருவன் அடைய கேரின் அவன் பரமன் உறவை இயல்பா அடைக்க உயர்வா ஒளி வீசி நிலை ஓங்கி நிற்கின்ருன். இன்னத சொல்வோன் இழிமகன்; அன்னதை உன்னது போவேன் உயர்மகன்;--தன்னேப் பொறையுடையன் ஆக்கும் புனிதேைபால் யாரே இறையுடையர் ஆவர். இவண்? பொறுமையை மருவினவன் புனிகனுயுயர்ந்த திகழ்கிருன். புன்மையைப் பொறுப்பதால் கெப்வத்தன்மை நேரே வருகிறது. To err is human; to forgive divine, (Pope) "பிழை புரிவது மனிதனிலை; பொறுப்ப தெய்வ நீர்மை’ என்னும் இது இங்கே கூர்ந்த ஒர்ந்து சன்கு சிக்திக்கவுரியது. பொறை இறைவனது உடைமை ஆதலால் அகனயுடைய வர் அதிசய நிலையை அடைகிருர். பிறருடைய பிழைகளைப் பொறுப்பவன் எவனே அவன்தான் இறைவனுடைய அருளைப் பெறவுளியவன். பொறுமையாளன் பால் பாமன் அருள்புரிகிருன். If ye forgive men their trespasses, your heavenly Father will also forgive you. But if ye forgive not men their trespasses, neither will your Father forgive your trespasses. (Bible, Matt, 6) 'மனிதருடைய பிழைக ைநீங்கள் பொறுத்து மன்னித் தால், உங்களை ஆண்டவன் உவக்க மன்னிப்பான்: பிறருடைய தவறுகளை சிங்கள் பொறுக்கவில்லையானல் உங்கள் பிழைகளை இறைவனும் மன்னித்த அருளான்' என எசுனாகர் இவ்வாறு கூறியிருக்கிருர் பொறையன் இறைவ னின் இனிய உறலாகிருன்,