பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 திருக்குறட் குமரேச வெண்பா சிறைபுகுந்தும் என் துன்பம் இன்றித் துய்த்து இன்பம் அடைக் திருத்தார்? எனின், யார்மாட்டும்இன்பு:உறும் இன்சொலவர்க்குத் அன்பு உறும் துவ்வாமை இல்லாகும் என்க. துவ்வாமை என்றது. வறுமையை. அவ்வல்=புசித்தல், நுகர்தல். ஐம்பொறிகளும் ஆா நுகராமை ஆகிய கிலேமை வறுமை ஆகலால் அதி துவ்வாமை என கின்றது. துவ்வாமை வந்தக் கடை. (கலி 22) துவ்வாதவர். (குறள், 42) இவை இங்கே எண்ணி உணர வுரியன. துவிவாள் ஆகிய என்வெய் யோளும். (புறம், 159) உண்ணுமல் பட்டினியாயிருக்க கம் மனைவியைக் குறித்துத் துவ்வாள் எனப் பெருஞ்சித்திரனர் இவ்வாறு கூறியிருக்கிருர், பசித் துயர் மிகவும் கொடியது ஆகலால் அதன் கடுமை யான கொடுமை தெரியத் துன்புறும் என்ருர், அளபெடைகள் ஈரிடத்தும் இன்னிசை தோன்ற கின்றன. மெலியர் வலியர் எளியர் சிறியர் முதலிய எல்லாரிடத்தும் இனிய சொல்லே இயம்பி வர வேண்டும் என்பது யார்மாட்டும் என்ற களுல் தெரிய வந்தது. மொழி சயமாயின் அவ்வாழ்வு எவ்வழியும் நலமாம் இன்சொல்லால் அறம் உண்டாம் என்பதை முன்பு கண் டோம்; அகனல் பொருளும் இன்பமும் உளவாம் என இதில் காணுகின்ருேம். சுகமுற விரும்பின் சொல் நயமுற வேண்டும். இன்பம் மிகுகின்ற இனிய சொல்லை எவரிடமும் கூறி வரு வார்க்குத் துன்பம் உறுகின்ற வறுமை அனுகாது என்பதாம். இன்சொல் இனிய நீர்மையுடையது; எவ்வுயிர்க்கும் இன் பம் தருவது; அகனே உரிமையாக வுடையவர் எவ்வழியும் கரும சீலராப்ப் பெருகிவருகிருர்; வரவே அவர் எதிரே தன் பத்தொடர் புகள் தோன்ருமல் ஒழிகின்றன; இன்பங்கள் விளைகின்றன. வறுமை படிக் பசியும் பட்டினுமாய்க் கிடக்க பகைத் து உழலுவதை எவரும் விரும்பார்; செல்வ வளங்கள் நிறைந்து நல்ல சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்றே எல்லாரும் யாண்டும் அவாவி எவ்வழியும் மூண்டு முயன்று வருகின்றனர்.