பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 திருக்குறட் குமரேச வெண்பா "தெம்முன் ஆயினும் செவ்விமென் போகமா மகளிர் தம்முன் ஆயினும் காத்தவரு அடல் வீமன்.' எங்கும் வாய்மையை நன்கு போற்றி மனத் தாய்மையாள குப் இவன் வாழ்ந்த வங்கள்ள உண்மையை இது வரைந்து காட்டியுள்ளது. அரிய ஆற்றல் அமைந்திருக்கம் பெரிய பொறு மையை இவன் பேணி வந்துள்ளான். பொருமையை யாதம் அறியாமல் பெருமையோடு பெருகி வந்தள்ளமையால் அரிய முனிவர்களும் இவன் பால் பிரியம் மிகுந்து வந்தனர். உன் உள்ளக் கிடக்கையை உள்ளபடி தெளிவாகச் சொல்' என்று கண்ணன் ஒருமுறை பலர் முன்னிலையில் இவனை நேரே கேட் டான். அக்கக் கேள்வி இந்த விரனுடைய மனத் தாய்மையை உலகம் உணர்ந்து தெளிய உதயமாயது. அதற்கு உடனே உரிமையா இவன் பதில் கூறினன். அயலே வருவது காண்க. பிறர்மனே யவரைப் பெற்றதாய் எனவும் பிறர்பொருள் எட்டியே எனவும் பிறர்வசை யுரைத்தல் பெருமையன்று எனவும் பிறர் துயர் எனதுயர் எனவும் இறுதியே வரினும் என்மனக் கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் மறலியும் மடியு மாறுமல் லியற்கை வலிமைகூர் வாயுவின் மைந்தன். (பாரதம், பழம், 17) இக்க மொழிகளால் இவனுடைய புனிதநிலைகள் தெளிவாக் தெரிய வந்தன. பிறர்மனே கயவாமை, பிறர்பொருள் விழையா மை, பிறர் வசை உரையாமை, எவ்வுயிர்க்கும் இரங்கியருளுதல், இவனிடம் செவ்விய சீலங்களாப் விளங்கி யிருக்கின்றன. கன் செஞ்சத்து அழுக்காறு இல்லாக இயல்பை ஒழுக்காருக ஒம்பி வருபவன் உயர்ந்த ஒழுக்கம் உடையனப் ஒளிமிகுந்து திகழ் வன் என்பதை உலகம் தெளிய இவன் உணர்த்தி கின்ருன். தீய பொருமை சிறிதும் இலாதவரே தூய ஒழுக்கம் உளார். பொருமை யுருதவரே புனித சிலர்.