பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 745 உள்ளம் சிறிதிழிந்தால் உற்றநலம் எல்லாம்போய்த் தள்ளும் படியாவர் தாழ்ந்து. மேலே குறித்த சரித்திரத்தை இவை விளக்கியுள்ளன. உள்ளம் அழுக்கா றுடையார் உலகின்கண் எள்ளப் படுவர் இழிந்து. அழுக்காற்ருல் இழுக்கே வரும். 165. கேடுபிறர் செய்யாதேன் கேடுற்ருள் காந்தாரி கோடியதன் கெஞ்சால் குமரேசா-கோடும் அழுக்கா றுடையார்க் கது.சாலும் ஒன்னர் வழுக்கியும் கேடீன் பது. (டு) இ.ன். குமரேசா! பொருமையுடைய காங்காரி என் தானகவே கேடு அடைந்தாள்? எனின், அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னர் வழுக்கியும் கேடு ஈன்பது என்க. பொருமை யுடையவர்க்கு வேறு பகைவர் வேண்டா; பொல்லாத கேடுகளை அதுவே ஒல்லையில் செய்து கொள்ளும். அழுக்காறு என்பது உள்ளத்துள் அழன்று எழும் கெட்ட வண்ணம் ஆதலால் எல்லாக் கேடுகளுக்கும் அது வித்தாப் கின் றது. பழுதான திய நினைவால் தீய சொல்லும் தீய செயல்களும் வினையும். அத் தீவினைகளால் எவ்வழியும் கேடுகளே கிளர்ந்து வரும். கேடு செய்ய வுரியவர் பகைவர்; அவரும் செய்ய முடி யாக கொடிய கேடுகளை அழுக்காஅறு விரைந்து செய்து விடும் என்றகளுல் இதன் வெய்ய தீமை நன்கு விளங்கி கின்றது. ஒன்னர்=பகைவர். உரிமையாப் ஒன்ருதவர் ஒன்னர் என நேர்ந்தார். இன்னுமை செய்யும் அவரும் அழுக்காற எதிாே இனியராப் கின்றனர். புறத்தே கின்அறு பொல்லாங்கு புரியும் அவ ரினும் அகத்தே யிருந்து உயிரைத் தயாாக்கி வருவது ஆதலால் கொடிய பகைவரினும் அழுக்காறு அஞ்சி ஒழிக்கத் தக்கது ஒழியாவிடின் அழிதுயரங்கள் வழிவழியே வளர்க்க வரும். ஒன்னர்த் தெறலும், (குறள், 264) ஒன்னுரைத் தேறேல், (ஆத்திகுடி, 107) 94