பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 திருக்குறட் குமரேச வெண்பா 166. சிறித் தடுத்த சிசுபாலன் சுற்றமேன் கூறுபட்டுத் தாழ்ந்த குமரேசா-தேறிக் கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும். (சு) இ-ள். குமரேசாl அழுக்காஅறுடைய சிசுபாலனது கிளைகள் என் அவல கிலேயை அடைந்தன? எனின், கொடுப்பது அழுக்கறப் பான் சுற்றம் உடுப்பகம் உண்பதும் இன்றிக் கெடும் என்க. பிறர் கருவகைப் பொருமையால் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இழந்த இழிந்து ஒழியும். கொடுப்பத உடுப்பது உண்பது என்பன வினையால் அணை யும் பெயர்கள். கொடுக்கப்படும் பொருள், உடுக்கப்படும் உடை, உண்ணப்படும் உணவு என முறையே எண்ணி உணர வந்தன. உலக வாழ்வின் நிலைகள் நேரே தெரிய நேர்ந்தன. உணவினும் உடை மனித வாழ்வில் மிகவும் அவசியமாயுள் ளமையால் அது முதலில் கின்றது. உண்ணுமல் ஒருநாள் முழுவ தும் வெளியே உலாவலாம்; உடையின்றி ஒரு கிமிடம் நிற்க CՔւயாத உடலும் உயிரும் உடை உணவுகளால் நிலவுகின்றன. உடம்பைப் பாதகாத்து உடை அழகு செய்கிறது. உயிரை இனித பேணி உணவு உறுதி புரிந்து வருகிறது. இடம் பொருள் ஏவல் முதலிய எவற்றினும் மக்கள் இன்புற்று வாழ்தற்கு இக்க இரண்டும் முதன்மையானவை ஆகலான் தலைமையா கண்டு வாைக்து காட்டினர். உடுப்பதம், உண்பதம் என்று கூறினும் செய்யுள் சிகையாக சீரோடு அமையும். அயலே இனிய ஒசைக் காக அளபெடைகள் நீண்டு இயல் இசைக&ன விளக்கி வந்தன. பொருமை யுடையவன் தானகவே கெடுவன் என முன்பு கூறினர்; இதில் அவனுடைய கேளும் கிளையும் பாழாம்என்கிரு.ர். ஒரு விட்டில் பற்றிய தீ அடுத்த வீட்டையும் னரித்த ஒழிக்கும்; அதுபோல் பொருமைக் கீ கன்னே உடையவன அழி ப்பதோடு அவனைச் சுற்றியிருக்கும் சுற்றத்தையும் சுட்டு அழிக் கும். அழிவு நிலைகளை ஒரனவு கெளிவாக அறிய உடையும் உண வும் விழி எதிரே வந்தன. பழிகேடுகள் பரிதாபமாயின.