பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 திருக்குறட் குமரேச வெண்பா இவர் இல்லறம் புரிந்து வந்துள்ள கிலேமையை இவை நன்கு காட்டியுள்ளன. எவரிடமும் எதையும் பெருமல் புனிதமாய் இவர் இனித வாழ்ந்து வருங்கால் முனிவர் சிலர் இவரிடம் வக் கார். திருவாலங்காடு என்னும் கலத்தில் சிவபெருமான் சிவ சத்தியோடு ஒர் அதிசயமான ஆடல் புரிக்கார். அந்த நடனத் தில் பார்வதிதேவியும் நேரே சமமாப் ஆடி வந்தார். அந்த அம்மையை வெல்ல முயன்ற இறைவன் தம் காகிலிருந்து கீழே விழுந்த குழையைத் தமது காலால் கோதி எடுத்து மேலே அாக்கிச் செவியில் அழகா மாட்டிக்கொண்டார்; இறைவி அவ் வாறு செய்ய முடியாமையால் நாட்டியத்தில் கோல்வியடைந்து கின்ருர். எவ்வகையிலும் கோல்வியுருமல் ஆடிவந்த பெண்ணாசி யை வெல்லப் பெருமான் செப்த சூழ்ச்சியை மருமமா அறிய அவாவி மாதவர்கள் இவரிடம் வங் த கேட்டார். விருபமாப் வினவிய அவர்க்கு இவர் நயமா ஒரு பாட்டில் பதில் சொன்னர். பூவில் அயனும் புரக் கானும் பூவுலகைத் தாவி அளங்கோனும் தாமிருக்க-காவில் இழைாக்கி நூல்கெருடும் ஏழை அறிவேனே குழைாக்கும் பிஞ்ஞகன் தன் கூத்து. (திருவள்ளுவர்) அதிசயமாய் நிகழ்ந்துள்ள பரமனது பரம ரகசியத்தை இவர் இவ்வாறு தெளிவா விளக்கியுள்ளார். காவில் இழை நக்கி நூல் நெருடும் ஏழை என்ற பணிவும் பண்பும் தெரிய வந்தது. நெய்யும் தொழிலின் நிலைமையையும் செய்யும் வாழ்வின் சீர்மை யையும் இங்கே தெளிந்து கொள்கிருேம். வந்தவர் யாவரும் இவரது மதிநலத்தை வியந்து மகிழ்க் து புகழ்ந்து போயினர். அந்தமட்டினில் ஐயமற்று உண்மை ஒர்ந்து அவர்தம் ஊர்வயின் சென்ருர் சந்தசைலக் குறுமுனி வான்தரு தமிழ்க்கொரு பெரும் பேரு வந்த வள்ளுவன் இகபரத்து யாவரும் மதிக்கும் மேதக வார்ந்தான் எந்த மாட்சியும் கற்புடை மனத்தொடர்பு எய்தினர்க்கு அரிதன்றே. (புலவர் புராணம்) இவருடைய அரிய மாட்சிகளை இங்கே அறிந்து கொள்ளு கிருேம். ஏலேல சிங்கன் என்னும் பெரிய செல்வன் இவர் பால்