பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 திருக்குறட் குமரேச வெண்பா யாச் சொன்னன்? எனின், இன்சொல் இனிது ஈன்றல் காண் பான் வன்சொல் வழங்குவது எவன் கொலோ? என்க. வன்சொல் என்றது கேட்பவர் நெஞ்சம் வருந்தும்படி யான கடுமொழியை வழங்குவத=வழக்கமாய்ப் பேசுவது. எவன் கொலோ = என்ன பயன் கருதியோ? ஐயமான வியப்பு அவனுடைய மடமையை நோக்கிப் பரிதாபமாய் எழுங் தது. தனக்கு அல்லலைச் செய்து கொள்ளலே உள்ளி இரங்கினர். இனிய சொல் இன்பம் கருதலை நன்கு அறிகின்றவன் கொடிய சொல்லைக் கூறுவது நெடிய மடமையாம். காண்பான் என்ற த நேரே அனுபவித்து அறிந்துள்ளமை தெரிய வந்தது. காட்சி ஈண்டு அகநோக்கில் அமைந்து கின்றது. இனிய சொல்லையே பேச வேண்டும் என்று மனிதருக்கு யாரும் ஏதும் போதிக்க வேண்டியதில்லை. இன்சொல் இன்பத் தையும், வன்சொல் துன்பத்தையும் விளைத்த வருவதை எல்லா ரும் தெளிவா அறிக் தள்ளனர். இருந்தும் இழிவான பழக்கங் களால் மொழி வழக்கில் இழுக்கமாய் இழிந்து உழலுகின்றனர். இன்சொல்லாளனை எவரும் பிரியமா உவந்து கொள்கின்ருர். வன்சொல்லன எல்லாரும் எள்ளி இகழ்ந்த விடுகின் ருர். இன்சொலான் ஆகும் கிளேமை இயல்பிலா வன்சொலான் ஆகும் பகைமைமன்--மென்சொல்லின் ஒய்வில்லா வாாருளாம் அவ்வருள் நன்மனத்தால் விவில்லா விடாய் விடும். (சிறுபஞ்சமூலம், 97) இன்சொல்லால் யாரும் உறவு ஆவர்; சீரும் சிறப்பும் பெருகும்; முடிவில் பேரின்ப விடு உண்டாம்; வன்சொல்லால் பகைமைத் துயரே விளையும் எனக் காரியாசான் இவ்வாறு கூறி யிருக்கிருர். கயர் நீங்கி உயர்வுற இனிய சொல் உதவுகிறது. இன்சொலான் அன்றி இருர்ே வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாகே-பொன்செய் அதிர்வளேயாய் பொங்காது அழற்கதிரால் கண் என் கதிர்வாவால் பொங்கும் கடல். (நன்னெறி, 18) குளிர்ந்த சந்திரனைக் கண்டால் கடல் கிளர்ந்து பொங்கு கிறது; எரி சூரியன் வந்தால் மடங்கியடங்கியுளது; அது பே ல்