பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 திருக்குறட் குமரேச வெண்பா புனிதமான அக்க இனிய உதவி அளவிடலரிய பெருமை யுடையது ஆகலால் கடல் அதற்கு உவமையாப் வந்தது. பல னேக் கருதாமல் உதவி செய்வது பரம நீர்மையாம். அதன் சீர் மையும் சிறப்பும் எல்லை கடந்துள்ளமை ஈண்டு உணர கின்றது. ஆரியன் அவனே நோக்கி ஆருயிர் உதவி யாதும் காரியம் இல்லான் போனன் கருணையோர் கடமை ஈதால் பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்ஞர் மாரியை கோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம் என்ருன். (இராமா, நாகபாசம், 271) காகபாசக்கால் கட்டுண்டு இலக்குவன் உயிர் மயங்கிக் கிடக்கான். அப்பொழுது கருடன் வந்து உதவி செய்து பாதும் பேசாது போனன். அங்க அதிசய நிலையை வியந்து இராமன் இவ்வாறு கதி செப்துள்ளான். ஆருயிர் உதவி யாதும் ஊதியம் காரியம் கருதாது பொனன் என்று அக் கோமகன் உள்ளம் உருகியுள்ளமையை ஊன்றி யுணர்பவர் அவனது நன்றியறிவின் கிலைமையை நன்கு தெரிந்து தலைமையை உணர்ந்து கொள்வர். பயனே அவாவிய அளவில் உதவி சிறுமையா யிழிகிறது. சிறுகன்றி இன்றிவர்க்குச் செய்தக்கால் நாளேப் பெறுகன்றி மன்னும் பெரிதென்று-உறுநன்றி தானவாய்சி செய்வது உம் தானமன் றென்பவே வானவாம் உள்ளத் தவர். யாப்பருங்கலம்) பயன் தாக்கிச் செப்யும் உதவியை இழிவா இது பழித் திருக்கிறது. சுய சலம் உயர்பயனைப் பாழாக்கி விடுகிறது. ஊதியத்தை எதிர்பாராமல் பிறர்க்கு உதவி செப்பவரே உத்தமராப் உயர்ந்து யாண்டும் ஒளி மிகப் பெறுகின்ருர். கைம்மாஅ உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயல்உதவி தாம்செய்வர்-அம்மா முளேக்கும் எயிறு முதிர்சுவைகா விற்கு விளேக்கும் வலியன தாம் மென்று. (நன்னெறி, 27) தனக்கு யாதொரு பயனையும் கருதாமல் பல் காவுக்கு உதவி புரிகிறது; இதனைப் பார்த்தாவது பரோபகாரங்களை நீங்கள் நயமா நன்கு செய்து வாருங்கள் என்று மனிதரை கோக்கிச் சிவப்பிரகாசர் இவ்வாறு விைேத விசயமா இனிது கூறியுள்ளார்.