பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 திருக்குறட் குமரேச வெண்பா உதவிய உத்தமன் என்று அப் பத்தினி இவ்வித்தகனே வியக்க புகழ்ந்தாள். பெப்தமொழிகள் செப்கான்மையைக் கலக்கின. மும்மையாம் உலகம் கந்த முதல்வற்கு முதல்வன் தாகாய்சி செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னல் எளியதுண்டே? அம்மையாய் அத்த யை அப்பனே! அருளின் வாழ்வே இம்மையே மறுமை தானும் கல்கினே இசையோடு என்ருள். (இராமா, உருக்காட்டு 71) அனுமான் செப்துள்ள உதவியை நினைந்து சீதை உள்ளம் உருகி இவ்வாறு உரையாடியுள்ளாள். உயிா தந் தாய்க்கு என்ற களுல் அத்தேவியின் ஆவியை இவன் அருளியுள்ளமை அறிய லாகும். பாதும் ஈடு செப்ய முடியாத பேருதவி என்று அப் பெண்ணாசி எண்ணி எண்ணி உருகியுள்ளாள். நன்றியறிவால் உருகியிருக்கும் அந்த உருக்கம் உரைகள்தோறும் பெருக்கமாய் நிலவியுள்ளது. முடிவில் சிறை மீண்ட போது நீண்டு வந்தது. உலகம் மூன்றும் உதவற்கு ஒருதனி விலையி லாமையும் உன்னினென்; மேலவை கிலேயி லாமை கினேந்தனென்; கின்னே என் தலையில்ை தொழவும் தகும் தன்மை யோய்! (மீட்சி, 28) நீ செய்த உதவிக்கு மூன்று உலகங்களே ஒருங்கே தங்காலும் இணை ஆகா; என் தலையினல் தொழ வுரிய தகவுடையோய்! என்று அக்குலமகள் கூறியுள்ளமையால் இவனது கிலேமையை ஒர்ந்த கொள்கிருேம். இந்திரசித்து ஏவிய பிரமாத்திரத்தால் இளையவன் மடிக்ககைக் கண்டு இராமன் உயிர் ப ைத த் து மூர்ச்சையாயினன். அதுபொழுது அரிய சஞ்சீவியைக்கொண்டு வந்து அனுமான் அனைவரையும் எழுப்பி யருளின்ை. எழுந்த இராமன் உழுவலன்பால் இவனைத் தழுவிக் கொண்டு விழி நீர் மல்கி வியத்து செய்த உதவியை உவந்த புகழ்ந்தான். அழியும் கால்தரும் உதவி ஐயனே! மொழியும் கால்தரும் உயிரின் முந்துமே? பழியும் காத்து அரும் பகையும் காத்துஎமை வழியும் காத்தன மறையும் காத்தன. (இராமா, மருத்துமலே, 119) மாருத விமல சேயை மகிழ்ந்தினி தருளின் நோக்கி ஆருத விடுதற்கு ஒத்தார் யேலால் அன்று செய்த