பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 407 முருக்கின் இதழைக் கருக்குவிக்கும் முறுவற் செவ்வாய்த் திரெளபதியும் இருக்கு முறையோர் அன்னம் கண்டு எடுத்தாள் கொடுத்தாள் இறைவன் கை. (1) அந்த அன்னம் சதுர்மறையும் அன்னம் ஆகி அருள் செய்தோன் முந்த உலகம் முழுதுண்ட முளரி இதழின் இடைவைத்தான் வந்து சுனேயில் வந்தனே செய் மறையோர் எவரும் வாரிதிமுன் தந்த அமுதுண் டவர்போலத் தாபம் தணிந்து தண்என்ருர். (2) உதரம் குளிர்ந்து வடிவு குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து மறைகாஅறும் அதரம் குளிர்ந்து கண்குளிர்ந்து ஆங்கு அருமா முனிவன் அதிசயித்து மதரஞ் சனக்கண் திருவாழும் மார்போன் மாயா வல்லபத்தால் இதரம் கடந்தான் உதிட்டிரன் என் அறு இவன் பால் மீண்டும் எய்தினல்ை. (3) உண்டோம் உண்டோம் உம்பருக்கும் உதவா ஒதக் கடல் அமுதம: கண்டோம் முன்னுள் எவ்வுலகும் கான முகுந்தன் கழலிணைகள்: வண்டோ லிடுதார்ப் பேரறத்தின் மகனே! உன்னே அரசு என்று கொண்டார் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில்? (4) (பாரதம், துருவாசமுனி, திகழ்ந்துள்ள நிலைமைகளை இவை வரைக் து காட்டியுள்ளன. யாவும் வியந்த காணுகின்ருேம். ஒரு அன்னப் பருக்கையே கண்னன் உண்டான்; எண்ணரிய பலன்கள் எதிரே விளக்கன. விருந்தின் ககுதி அளவே வேள்விப் பயன் என்பதை உலகம் இவர் பால் கண்டு உண்மை நிலைகளை நேரே ஒர்க் து தெளிந்தது.