பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 திருக்குறட் குமரேச வெண்பா விழுமம் குன்ற. (இராமா, மிதிலே, 122) விழுமமே இடும்பை. (நிகண்டு) இவற்றுள் விழுமம் விளக்கியுள்ள பொருள்களை அறிக. அல்லலை நீக்கி அருளிய கல்லோசை உள்ளுற உணர்ந்து வருபவர் செய்நன்றி அறிந்தவராய்ச் சிறந்து வருகிருர்; அவ் வரவு உயிர் வாழ்வுக்கு உரமாப் உ ய ர் வு கருகிறது; அக்க உயர்ச்சி நலனை இங்ங்னம் உரிமையா உணர்த்தி யருளினர். எண்ணுவர் என்னத உள்ளுவர் என்றது உருக்கமாப் உள்ளுற உணரும் அவ்வுண்மையை துண்மையாக் தெரிய வங் தது. எண்ணுதற்கும் கினைத்தற்கும் உள்ளுதற்கும் உள்ள வேறு பாடுகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். உள்ளுவர் என்பதற்கு உரிமையாளரை வெளிப்படையாச் சொல்லவில்லை; ஆகவே விழுமமுற்ற விழுமியோர் எல்லாரும் கெழுமி கின்றனர். மேல், உதவி செய்தவரை ஒருபோதும் மறக்கலாகாது என்ருர்; இதில், அவரை எழுபிறப்பிலும் கினைக்க வேண்டும் என்கின்ருர். நன்றியறிவான கினைவு.என்.றும் நன்மை கருகின்றது. தமக்கு நேர்ந்த தன்பத்தை நீக்கி யருளினவாத அன்புரி மையை னழுமையும் விழுமியோர் கருதி வருவர் என்பதாம். ஒரு சமையத்தில் உரிமையா உதவினவரை எப்பொழுதும் பெருமையாக் கருதி ஒழுக வேண்டும் என்பார், எழுபிறப்பை எடுத்துக் காட்டினர். உயிர் வாசனை பிறவிகள் தோறும் புகும் ஆதலால் அதுவும் எழுமை என்ற இதல்ைதெளிவா.அறியகின்றது. உப்பு இட்டவரை உள்ளவரையும் கினை. என்பது பழமொழியாய் வந்துள்ளது. செய்த உபகாரம் சிறிதானலும் அங்ஙனம் செய்தவரை எண்ணி நன்றி பாராட்டி வரின் அது பெரிய புண்ணியமாய் இன்பம் பயந்து வருகிறது. தெய்வமும் அவனுக்கு அருள் புரிகிறது உதவி பாரிடமிருந்து வரினும் அது தெய்வ கிதியே; அதனைச் செய்தவரை உரிமை யாக் கருதிவருவது தெய்வத்தை நேரே தியானித்த வருவதாம். கொண்ட கடனைக் கொடுப்பது போல் செப்த உதவியை கினைப் பது. கினையாமல் மறந்து விடின், வாங்கிய கடனேக் கொடாக வன் பழிபடுதல்போல் இழிவடைய நேரும். அவ்வாறு இழிவு நேராமல் வாழ சேர்ந்தவர் எவ்வழியும் சன்றறிவாளராப் விற்பர்.