பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

908 திருக்குறட் குமரேச வெண்பா 198. மாறரொரு சொல்லே மதுரகவி முன்சொன்னர் கூருர்வே றென்னே குமரேசா-தேறி அரும்பயன் ஆயும் அறிவினர் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். (அ) குமரேசா நம்மாழ்வார் மதுரகவியாழ்வார் முன் பெரிய பயனுடைய ஒரு சொல்லேயே ஈயமாப் இனி சொல்லி வேறு என் பாம்ை பேசா திருக்கார்? எனின், அரும்பயன் ஆயும் அறி வினர் பெரும் பயன் இல்லாக சொல் சொல்லார் என்க. அரிய பொருள்களை ஆராயும் நல்ல அறிவினை யுடையவர் பெரிய பயன் இல்லாத சொல்லே பாதும் பேசார், அரும்பயன் என்றது எவரும் எளிதில் அடைய முடியாத அரிய பெரிய நலன்கண், புகழ் புண்ணியம் சுவர்க்கம் முக்தி என்னும் இவை உயிர்க்கு உரிய அரிய ஊதியங்கள் ஆதலால் அரும்பயன் என அன்போடு விரும்பியுனா வக்கன. எவ்வழியால் இவற்றை இனி து எப்கலாம் என்று ஆராய்க்க சிந்திக்கும் மெய்யறிவாளரை ஆயும் அறிவினர் என்ருர், உலக நிலையில் பொருள் வரவு முதலிய சிறிய பயன்களை ஆயும் அறிவுகள் பெரும்பாலும் உளவாதலால் அவற்றினும் வேறுபாடு தோன்ற அரும்பயன் ஆயும் அறிவு எனப் பெரும்புகழ் கோன்ற விரும்பி விளக்கினர். ஆய உரிய த அறிய வந்தது. மேல், சான்ருேர் பயன்இல சொல்லலாகாது என்ருர்; இதில், அங்கனம் சொல்லாதவர் கிலேயைச் சுட்டி யுரைத்தார். அறிவுக்கும் சொல்லுக்கும் நெருங்கிய உறவுரிமைகள் உள. உள்ளத்தில் உள்ள உணர்வு கிலேயை உரைகள் வெளிப்படுத்து கின்றன. ஒருவன் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள் அவனு டைய அறிவமைதிகளின் கிறைவுகளையும்குறைவுகளையும் எளிதே தெரியச் செப்கின்றன. உரை உணர்வை அறியும் கருவி. மனிதனிடம் அறிவு பெருகப் பெருக உரைகள் பயனுடைய னவாப்ச் சுருங்கி கயனேடு வெளி வருகின்றன; அது சிறுகச் சிறுக அவை பயனிலவாய்ப் பெருகி எழுகின்றன.