பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

940 திருக்குறட் குமரேச வெண்பா நெல்லை விதைத்தவன் நல்ல உணவை உண்கிருன்; அங்க னம் விதையாதவன் பாதும் இல்லாதவனப் அல்லலடைகிருன்; அதுபோல் முன்னம் கல்வினை செய்தவரே செல்வராய்ச் சிறந்து வாழ்கிருர்; அது புரியாமல் தீவினைசெப்தவர் வறியராய்வாடுகின் |றனர். இருவினைகளின் பலன்களையும்.இ உஇனிது விளக்கியுள்ளது. புத்தியோடு முத்தி தரும் புண்ணியத்தால் அன்றியே மத்தமிகு பாவத்தால வாழ்வாமோ-வித்துபயிர் தாயாகி யே வளர்க்கும் தண்புனலால் அல்லாது தியால் வளருமோ செப்பு. நீதிசாரம், 57 இனிய சுகவாழ்வு புண்ணியத்தால் உண்டாம்; பாவத்தால் துன்பமே யாம்; நல்ல பயிர் கண்ணிரால் வளருமே அன்றித் தியால் வளராது; அதுபோல் உயிர் கல்வினையால் செழித்து வாழுமே அன்றித் தீவினையால் வாழாது என்னும் இது ஈண்டு நுனித்து உணர வுரியது. உவமைக் குறிப்பை ஊன்றி நோக்குக. தீய செயல் கோயையே விளேக்கும; வறுமை முதலிய துயரங் கள் அதனல் பெருகிவரும். வறுமை மருவினுல் பொறுமையா யிரு; ஆனவரையும் சல்ல வகையில் முயற்சி செய்; அது உயர்ச்சி யாம். அந்த உயர்ந்த வழியை விட்டு விலகினல் இழித்த துயரே. இல்லாமையை நீக்கக் கருதிப் பொல்லாத ைேமயைச் செப் யத் தணிவது நஞ்சை உண்டு துன்பம் உறுகின்றவன் மேலும் அதைத் தின்னச் செல்வது போல் இன்னலான மடமையாம். முன் செப்த தீவினையால் வறியன் என நேர்த்தாய்; பின் லும் அதைச் செய்தால் கள்ளன் பொப்யன் வஞ்சன் இயன் என்று வசையாப் னள்ளப்படுவாப். வறுமையோடு இந்தச் சி.டி. மைகளும் சேரும் ஆதலால் தீயதை யாண்டும் திண்டலாகாது. முறையான முயற்சியால் அன்றிக் களவு முதலிய தீவினை களால் பொருள் செய்து தனது வறுமையை ஒருவன் நீக்க முயல்வது மூடமருளே. தீமை ஒழிந்த அளவே சேமம் விளைந்து வரும். தீய செயலேத் தீய விடமாக் கருதி விலகி உறுதி பெறுக. தீவினை செய்பவன் கோவினையே நுகர நேர்கிருன். ஏழை என்று பிறனே எளிதா கினைந்து இடர்செய்யலாகாது; செய்தால் யுேம் எழையா யிழிவாப் எனவும் ஒரு பொருள் இதில் மறைவா யுளது. தீயது எவ்வழியும் கோயே; அதனை யாஅம் அனுகாதே.