பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$984 திருக்குறட் குமரேச வெண்பா இனிய உபகாரி எவ்வுயிர்க்கும் இன்பம் கனிய அருள்வன் கனிந்து. ர்ேபோல் உதவி நிறை புகழ் பெறுக. - 216. கோட்டி முதலியார் கொண்டசெல்வம் எல்லார்க்கும் கூட்டியதேன் இன்பம் குமரேசா-நாட்டில் பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்ருல் செல்வம் நயனுடை யான்கட் படின். (6) இ-ள். குமரேசா ! கோட்டி முதலியார் செல்வம் எல்லார்க்கும் வன். இனிமையாயிருந்தது. எனின், செல்வம் கயன் உடையான் கண் படின் பயன்மாம் உள்ளுர்ப் பழுத்தற்ருல் என்க. இனிய குணவானிடம் செல்வம் சேரின் பயனுடைய கனி மாம் ஊர் கடுவே பழுத்துச் சீரோடு இனிது நிற்பது போலாம். படின் என்றது அவ்வாறு உண்டாதல் அளிது என்பது தெரிய கின்றது. கயன் இல்லாரிடமே செல்வம் வியனுய் நிற்றலால் கல்ல உபகாரங்கள் நாட்டில்அரியன வாயின. பணம் இருந்தாலும் குணம் இல்லையானுல் மணம் இல்லாத மலர்போல் அவர் மாண் பிழந்து படுவர். படவே யாதொரு பயனும் இன்ரும் அன்பு பண்பு அறிவு அமைதி முதலிய நல்ல குணநீர்மை கள் அமையின் அவன் கயன் உடையன் என உயர்புகழ் பெறு கிருன். அந்தப் பெருந்தகையின் பொருள் பலர்க்கும் விருந் காய் இன்பம் தருகிறது. நயன் வழியே பயன் வழிகிறது. உள்ளத்தில் கயன் இல்லாதவன் உலகத்தில் எவ்வளவு செல்வங்களை வைத்திருந்தாலும் யாருக்கும் ய ர து ம் ப ய ன் படான். பயன் இல் செல்வன் நயன் இலஞய் நாசமடைகிருன். வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச் சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி யார்கண்ணும் இகந்துசெய் திசைகெட்டான் இறுதிபோல் வேரொடு மரம் வெம்ப விரிகதிர் தெறுதலின். (கலி, 10)