பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 திருக்குறட் குமரேச வெண்பா சிறந்தாளும் காயல் துரைசீதக் காதி திரும்பிவந்து பிறந்தால் ஒழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே. (5) (படிக்காசுத்தம்பிரான்) இவருடைய குண நீர்மைகளையும் உபகார நிலைகளையும் இக் கவிகள் சுவையாய் உணர்த்தி நிற்கின்றன. இவர் இறந்து சமாதி யடைந்த பின் அந்தச் சவக்குழி அருகே ஒரு வைர மோதிரம் கிடந்தது. அதுவும் ஒருவனுக்கு உதவியாயது. ஆகவே செத்தும் கொடுத்தான் சீதக் காதி எ ன் லும் பழமொழி கிழமையாய்த் தோன்றியது. பெருந்தகையாளன் செல்வம் மருந்து மாம் போல் எல்லார்க்கும் எவ்வகையிலும் செவ்வையா இனிது பயன் கரும் என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தி நின்ருர். உள்ளம் கனிந்த உயர்வள்ளல் எல்லார்க்கம் தெள்ளமுதம் ஆவான் தெளிந்து. உபகாரியாய் உயர் கலம் பெறுக. 218. பண்டுசெல்வம் தேய்ந்தும் பரிந்தளிப்பேன் என்றிரகு கொண்டெழுந்தார் என்னே குமரேசா ---கொண்ட இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர். (அ) இ-ள் குமரேசா தன் செல்வம் தேய்ந்தும் இாகு மன்னன் என் உபகாரம் புரிய ஊக்கி எழுந்தான்? எனின், கடன் அறி காட்சி பவர் இடன் இல் பருவத்தும் ஒப்பு.ாவிற்கு ஒல்கார் என்க. கடமையை உணர்ந்த மதிநலம் உடையவர் தம் செல்வம் குறைக்க போதும் உபகாாம் செய்வதில் உள்ளம் சுருங்கார். இடன் - செல்வம்; வசதி; விரிவு. வலியுள்ள நிலை இடம் ஆம். அது னகர வீறு பெற்று இடன் என வந்தது. இடம் பொருள் ஏவல் என வாழ்க்கையின் வசதிகளை இங்ஙனம் வழங்கி வருகின்றனர். கிடமான நிலைமை இடம் என இசைந்தது. இடம் இல்லாக் காலும் இரவு ஒல்லா. (குறள் 1064) இடன் இன்றி இரந்தோர்க்கு ஈயாமை இழிவு. (பாலைக்கலி2)