பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

994 திருக்குறட் குமரேச வெண்பா பிறர்க்கு உபகாரம் செய்வர்; ஆற்று நீர் அற்ற இடத்தும் அது ஊற்று ரோல் உயிர்களுக்கு உதவும் என இது உரைத்துளது. அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே; கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே; சிறந்தமைந்த கேள்வியர் ஆயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. (இனியவை நாற்பது32 உற்றவர் துயர் ரே உதவுக; கடன் கொண்டும் செய்யவுரிய ஒப்புரவைச் செய் எனப் பூதஞ் சேந்தனர் இங்கனம் கூறியுள்ளார். கடன் அறிதலாவது சிற க்க மனிகப் பிறப்பை அடைங்க வன் அத தற்கு உரிய உயர்ந்த கடமைகளைத் தெரிந்து உதவி புசிகல். அழியல் ஆயிழை இழிபு:பெரிது உடையன் பழியும் அஞ்சும் பயமலை நாடன் நில்லா மையே நிலையிற்று ஆகலின் நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற் கடப்பாட் டாளன் உடைப்பொருள் போலத் துங்குதற் குரியது அன்று நின் அங்கலும் மேனிப் பாஅய பசப்பே. (குறுந்தொகை143) நயனுடைய கடப்பாட்டாளன் பொருள் யார்க்கும் கன்கு உபகாரமாம என நககானா இவ்வாறு உசைத் தருககனருPன. காட்சியவர் என்றது. தெளிக்க மெய்யறிவாளரை. உண் மையை உணர்ந்தவர் எவ்வழியும் தன்மை புரிந்து உயர் கதி பெறுகின்ருர். தெளிவான காட்சி தெய்வ நிலையமாகிறது. இழிகுலத் தென்றும் பிறவார் இறைவன் பழுத று காட்சி யவர். [1] உறுப்பிற் பிறர்பழிப்ப என்றும் பிறவார் மறுப்பாடில் காட்சி யவர். (அருங்கலச்செப்பு) காட்சியவருடைய மாட்சியை இது நயமாக் காட்டியுளது. முகத்தில் உள்ள கண் உலகப் பொருள்களைத் தெரிந்து கொள்கிறது; அது போல் அகத்தில் உள்ள காட்சி உண்மை கிலே களை ஒர்ந்து கொள்ளுகிறது; கொள்ளவே அதனை யுடையவர் உறுதி கலங்களைச் செய்து உய்தி பெறுகின்ருர். அரிய உடல் எடுத்தது உரிய கடமைகளைச் செய்யவே; அவற்றுள் ஒப்புரவு