பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

998 திருக்குறட் குமரேச வெண்பா தனது அமுத சுரபியால் உயிரினங்களுக்கு உணவூட்டி உதவிபுரிந்து வந்த ஆபத்திரன் அந்த உபகார நீர்மையை இழந்த போது உள்ளம்வருக்கி கொங்துள்ள கிலைமையைஇவை உணர்த்தி யுள்ளன. ஒப்புரவு ஒழிந்தது, அற்புதச் செல்வத்தை அவமே இழந்தது போல் உளைந்து வருந்தியிருத்தலால் இந்த உபகாரி யின் உயர்வான நயனுடைமையை ஈண்டு நன்கு உணர்ந்துகொள் கிருேம். மன்னுயிர்கள் மகிழ்ந்து வாழவே இவன் மருவியுளன். தம் உடலை வளர்ப்பதினும் பிறர்க்கு உபகாரம் .ெ ச ய் வதையே மேலோர் உரிமையாக் கருதுகின்றனர். தாம் வறுமை பால் வாடினும் தம் கடமையை அவர் திடமாய்ச் செய்துவருவர். ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறு உம்---திங்கள்போல் செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந் தார். (நாலடி, 148) நல்ல குடிப்பிறந்தார் கல்கூர்ந்தார் ஆளுஅம் ஒப்புரவிற்கு ஒல்கார் என இது குறித்துள்ளது. ஒரு பக்கம் பாம்பு கவ்வி வருத்தினுலும் மற்று ஒரு பாதியைக் கொண்டு உலகத்திற்கு ஒளி புரிந்து சந்திரன் உதவி செய்கிருன்; அதுபோல் வறுமை தன்னை வாட்டினுலும் பெருந்தகையாளன் பிறர்கலமுற உதவி புரிவன். உவமையும் பொருளும் ஊன்றி ஒர்ந்து உணரவுரியன. தண்ணளியும் தகவுமுடைய புண்ணிய நீரர் மன்னுயிர்கள் இன்புறவே எவ்வழியும் எண்ணி ஒழுகி வருகின்ருர். உலகின் இருளை நீக்கி மதி ஒளி செய்தருளுகிறது. உயிர்களின் துயர்களை கிக்கிஎவ்வழியும்செவ்வையா உயர்ந்தோர்.இதம்செய்தருளுகிரு.ர். தங்குறைதிர் உள்ளார் தளர்ந்து பிறர்க்குறுாஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்---திங்கள் கறையிருளை நீக்கக் கருதாது உலகில் நிறையிருளை நீக்குமேல் நின்று. (நன்னெறி. 10) விழுமிய மேலோர் நிலைமையைச் சிவப்பிரகாசர் இவ்வாறு விளக்கியுள்ளார். காம் உண்ணுமல் பட்டினியிருப்பினும் பிறர்க்கு ஊட்டியருளுவது சான்ருேர் இயல்பாய்ச் சார்ந்துள்ளது. செயலும் இயலும் பயனுடையனவாய் வரும் அளவே மனி தன் நயனுடையணுய் உயர்ந்து வியன ஒளி பெற்று வருகிருன்.