பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒ. ப் பு ர வ றி த ல் 1007 உள்ளல்! ஓங்குலகு உண்டவன் என்றுமுன் வெள்ளி கூற அவ் வேந்தனும் கூறுவான். [2] (பாகவதம், 8-7) உள்ளதை உரைத்து இவ்வாறு வெள்ளி தடுத்தும் இவ் வள் ளல் யாதும் மாருமல் கொடுத்தான். அதனல் அரசை இழக் கான்; பரமபதத்தை அடைந்தான். இவனுடைய உள்ளப் பண் பையும் உபகார நீர்மையையும் தேவர் முதல் யாவரும் வியக்து புகழ்ந்தனர். ஒப்பு:ாவினல் கேடு வரும் எனினும் அது உவக்க கொள்ளத் தக்கதே என்பதை உலகம் அறிய இவ் வன்னல் உணர்த்தி நின்ருன். இவனது உதவி உயர் பதவி யாயது. உதவி புரிய உயிரும் தருவார் பதவி பரம பதமென்று--நிதமுமிவ் வையம் தெரிந்துய்ய மாவலி.முன் ஒப்புரவைச் செய்து சிறந்தான் தெளித்து. மன்னுயிர்க்கு உதவுதல் மகிமை ஆகியே தன்னுயிர்க்கு இனிமையாய்த் தருமம் கீர்த்தியாய் பொன்னுல கின்பமும் பொருந்த நல்கலால் அன்னதை அமுதென ஆய்ந்து கொள்கவே. உடலும் பொருளும் உயிரும் பிறருக்கு இடமா உதவல் இனிது. உதவி செய்வது உயிர்க்கு உய்தி புரிவதாம். இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு கைம்மாறு கருதாமல் உதவி செய். ஈட்டிய பொருள் இதம் புரியவே. ஒப்புரவே யாண்டும் உயர்ந்தது. ஒத்ததை அறிந்து உதவாதவன் செத்தசவமே. ஊருணி நீர்போல் உதவியாயிரு. கனிமரம் போல் இனியன் ஆகுக. பெருந்தகை செல்வம் பேருப காரமாம். நல்குர வுறினும் நல்லோர் நல்குவர். நயனுடையாளர் பயனே புரிவர். அல்லல் நேரினும் நல்லது செய்க. உஉ-வது ஒப்புரவறிதல் முற்றிற்.அ.