பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1018 திருக்குறட் குமரேச வெண்பா எண்மை யாயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவிலாப் புன்செல்வர் ஈயார் வண்மையாளர் தம் ஆருயிர் ஆயினும் . மாற்றலர் கேட்பினும் மருரே. - (பாரதம்) இவ் விரனுடைய வண்மையை விண்ணும் மண்ணும் வியக்த: புகழ்ந்துள்ளன. பாரதப் போரில் பதினேழாம் நாள் இவன் இறந்துபட நேர்ந்தான். அப்பொழுது மாயவன் ஒரு மாதவன் போல் நேரே கோன்றி எனக்கு எதாவது கொடு என்று கேட் டான். என்ன வேண்டும்? என்ருன். நீ பண்ணியுள்ள புண்ணியம் அனைத்தையும் தா என்ருன். உடனே தந்தேன்; கொள்: ' என்று கொடுத்தான். கண்ணனும் கண்ணிர் மல்கித் தன் உருவைக் காட்டினன். அதனேக் கண்டு கொழுது. உருகி அழுது தன் வாழ்வை எல் லாம் எண்ணி ஊழ் முறையே மொழிக்கான். தருமன்மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர்மலேந்து தறுகண் ஆண்மைச் செருவில் எனது உயிரனைய தோழற் காகச் செஞ்சோற் றுக் கடன் கழித்தேன் தேவர் கோவுக்கு உரைபெறுதற் கவசமும் குண்டலமும் ஈந்தேன் உற்றபெரு நல்வினைப் பேறு உனக்கே தந்தேன் மருதிடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே! மாதவத்தால் ஒரு தமியன் வாழ்ந்த வாறே. {f} வான் பெற்ற நதிகமழ்த்ாள் வணங்கப் புெற்றேன் . மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன் தேன்பெற்ற துழாயலங்கற் களப மார்பும் - திருப்புயமும் தைவந்து-திண்டப் பெற்றேன் ஊன் பெற்ற பகழியினுல் அழிந்து வீழ்ந்தும் உணர்வுடன் நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன். யான் பெற்ற பெருந்தவப்பேறு என்னை அன்றி = இருநிலத் தில் பிறந்தோரில் யார் பெற்ருரே? (பாரதம்} == ஈந்து வாழ்ந்து கான் பெற்றுள்ள பேறுகளைக் கன்னன் இவ்வாறு கருகி மகிழ்ந்து புகழ்ந்துள்ளான். யாரிடமும் கொள் காமல் எல்லார்க்கும் யாவும் கொடுத்து இவன் பேரின்பம் பெற்றுள்ளாகிலையை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். ஈதலே கன்று: என்பதை உலகம் அறிய இக் குலமகன் உணர்த்தி நின்மூன்.