பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1030 திருக்குறட் குமரேச வெண்பா தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே! (அருட்பா) இல்லை என்னுமல் எல்லார்க்கும் ஈங்து வர வல்ல நல்ல வாழ்வைத் தக்தருளும்படி ஆண்டவனே நோக்கி இராமலிங்க அடிகள் இவ்வாறு அன்பு மீதார்ந்து வேண்டியிருக்கிரு.ர். இாப்போர் முகம் மலர ஈவோர் அகம் மலரும். தன் பால் இாங்து வந்தவர் உவந்து செல்லும் வரையும் உயர்ந்த வள்ளல் உள்ளம் உவந்து நில்லாது; அல்லலோடு அலமந்து மறுகி கிற்கும். இது களன் பால் தெரிய நின்றது. ச ரி க ம். கிடதநாட்டு மன்னன் ஆன களன் தமயந்தியை மணந்து கொள்ள விழைந்து விதர்ப்ப தேசத்தின் இராசதானிக்கு வங்கிருந்தான். அந்த அரசிளங்குமரியின் சுயம்வரம் வியனுய் விளங்கி நின்றது. அரசர் பலரும் அங்கே வங்கிருந்தனர். அமார் கோனும் வரு ணன் முதலிய துணேவர்களுடன் ஆண்டு அடைங்கிருந்தான். களனுடைய உருவப் பொலிவையும் எழிலையும் நோக்கி உள்ளம் வியங்தான். இந்தப் பேரழகனே அன்றி வேறு எவரையும் அந்த அதிசய அழகி விரும்பாள் என்று வாசவன் ஆசை மீதுார்ந்து இவன் பால் வந்தான்: கிடத பூபதி உன்பால் ஒன்றை வேண்டி வந்தேன்; என் பால் அன்பு செய்து எனக்கு நீ அதை அருள வேண்டும்’ என்று விநயமாய் வேண்டினுன். வேண்டவே இந்த ஆண்டகை வியந்து மறுகினன். எல்லாச் செல்வங்களும் உடைய தேவராசனுக்கு யாது தேவை என்ன குறை? இன்னது என்று தெரிய வில்லையே; தெரிந்தால் உடனே கொடுத்து விடலாமே.” என்று இன்னவாறு எண்ணி எண்ணி இன்னல் உழங்தான். உண்ணெகிழ்ந்து இறைஞ்சிய உலங்கொள் தோளினுன் விண்ணுலகு ஆள்பவர்க்கு அரிய மேம்பொருள் மண்ணுலகு ஆள்பவர் மாட்டு வைகுமோ எண்ணின் மற்று இவர் உளம் யாவதாங்கொலோ? (1 குறிப்பறிந்து ஈதலே கொடைமற் றின்றென மறுத்தலே கேட்டபின் வழங்கல் ஆதலின் பெறற்கரும் ஆவியும் பெட்பின் ஈகுவன் திறப்பட இவர் உளம் தெரிந்த தில்லையால் (2