பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1032 திருக்குறட் குமரேச வெண்பா வலிமையினும் மெலியதே. ஈவார் ஆற்றலே ஏற்ற முடையது. ஆற்றுவார் என்றது அரிய செயல்களைச் செய்யும் பெரி யோரை. உயிர்க்குப் பெருமை கருகிற அருமையான கருமங் கள் தவமே ஆதலால் அந்த அருந்தவத்தைச் செய்கின்ற பெருக் ககையாளர் ஆற்றுவார் என ஈண்டு ஏற்றமாய் நின்ருர் வீட்டுக்கு கெறியான முறையை நேரே செய்பவர் என்பது இப்பேரால் தெரிய வந்தது. தீயில் இட்ட பொன் போல் பட்டினியுள் தவம். தம்மை வெம்மையாய் வருத்துகின்ற பசியைப் பொறுத் அக் கொள்ளலே அருந்தவம் புரிவாாது பெருந்திறலாம். ஆகவே பசி ஆற்றல் அவரது போாற்றலாய் நின்றது. ஆற்றல்-பொறுத் கல், அடக்கல். உற்ற துயர் சகித்தல் உயர்தவமாய் ஒங்கியது. உற்றநோய் நோன்றல் தவத்திற்கு உரு. (குறள், 261) தவத்தின் நிலையை உணர்த்தியுள்ள இது இங்கு உணர வுரியது. உற்ற பசியை அடக்கி உறுதியாய் நின்று தவம்புரிபவர் உல கில் மிகவும் பெரியவர். அவரினும் பெருமகிமையுடைய பெரிய வர் ஈண்டு அறிய வங்துள்ளனர். கடுமையான தவம் புரிபவரினும் இனிமையான ஈகையாளர் தனியே உயர்ந்து திகழ்கின்ருர். கருமமும் தானமும் ஈகையில் நலமாய் மருவியிருத்தலால் இது தவத்தினும் மேலாய்ச் சிறந்து சீர்த்தி மிகப் பெற்றது. தவம் பசியை ஆற்றுகிறது. * தருமம் அதனை மாற்றுகிறது. கானும் பசித்துப் பிறர் பசியையும் நீக்காமல் தவசி கிம்கிருன். தானும் பசியாமல்.பிறர்பசியையும்நீக்கித்தருமவான்கிலவுகிருன். தன்னையும் காத்துப் பிறரையும் பேணித் தவநெறிகளையும் இனிது ஆதரித்துவருதலால் ஈகையாளன் தவசிகளினும் பெரிய வனுய வாகை சூடி வருகிருன். ஈதலின் ஏற்றம் தெரிய ஆற்றல் வக்கது. பசி நீக்கம் குறித்தது துயர் நீக்கம் கருதி. ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை * நோற்பாரின் நோன்மை யுடைத்து. (குறள், 48) தவசிகளையும் நெறியே ஒழுகச் செய்து வருதலால் இல் லறம் க வ ம் புரிவோரி அனும் ஆற்றலுடையது என முன்னம் குறித்துள்ளதும் இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ள கேர்க்கது.