பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1036 திருக்குறட் குமரேச வெண்பா உற்றபசி நீக்கும் உரவோன் உயர்தவங்கள் பெற்றபலன் எல்லாம் பெறும். அருந்த உணவு தருவது அருந்தவத்தினும் சிறக்கது. 226. பெற்றனகொண் டேனே பெருஞ்சித் திரர்பசிநோய் குற்றமறத் தீர்த்தார் குமரேசா-முற்றுமே அற்ருர் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்ருன் பொருள்வைப் புழி. (6) இ-ள். குமரேசா ! தாம் பெற்ற பொருளைக் கொண்டு பெருஞ் சித்திர ஞர் என் பிறர்பசிகளை நீக்கியருளினர்? எனின், அற்ருர்அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்ருன் பொருள் வைப்புழி என்க. எளியவாது கொடிய பசியை நீக்குவது பொருள் பெற்ற ஒருவன் அதனை இனிது பாதுகாத்து வைத்தற்கு உரிய உறுதி நிலையமாம். அரிய பெரிய சேம நிதியின் நிலை தெரிய வந்தது. அற்ருர் என்றது. வறியரை. பொருள் அற்றவர், உணவு கள் அற்றவர், நிலை அற்றவர், கதி அற்றவர் என அவரது பரி தாப நிலைகள் யாவும் தெரிய அற்ருர் என்ருர். இல்லாதவர், எளி யவர், மிடியர், ஏழைகள் என்பனவும் அவருடைய பிழைகளை விளக்கி கின்றன. அல்லல்களை நீக்குவதே நல்ல தருமமாம். பசி மிகவும் கொடியது; உயிர்களை வாட்டி வதைப்பது; அங் தத் தீய நோயால் வருந்துபவர்க்கு அருங்த உணவுகரின் அது பெரும் புண்ணியமாம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று உயர்ந்தோர் புகழ்ந்து வங்துள்ளமையால் பசி தீர்த்தல் எவ்வளவு உயர்ந்த தருமம் என்பதை ஒர்ந்து உணர்ந்து கொள்ள லாம். துயர்களை நீக்கி உயிர்களை உவகை செய்து வரு கலால் உணஆட்டம் உயர்ந்த உயிர்த் தேட்டம் ஆய் ஒளி மிகுந்துளது. மனிதன் பொருளை ஈட்டுவது சுகமாய் வாழ வேண்டும் என்று கருதியே; தான் உண்ணுவதில் சிறிய சுகம்; பிறர்க்கு ஊட்டுவதில் பெரிய இன்பமும் உரிய அறமும் மருவி யுள்ளன. உண்ண உதவுவது புண்ணியமாய் வருகிறது.