பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1038 திருக்குறட் குமரேச வெண்பா உபகார நிலையை ஜெரோம் என்னும் பெரியவர் இவ்வாறு சுவை யாய்க் குறித்துள்ளார். இவரது காலம் 1500 ஆண்டுகளுக்கு முன்னாாம். வறியர் பசி ரே உதவியுள்ளமை அறிய வந்தது. அற்ருர் அழிபசி தீர்ப்பதே பொருளை இனிது வைத்தற் குப் புனிதமான இடம் எனத் தேவர் குறித்துள்ளதோடு இது கருத்து ஒத்துள்ளது. உண்மையை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். பசி திர அருளுவது. பரம திருவாய் வருகிறது. What I gave, I have; what I kept, I lost. Epitaph) பிறர்க்கு கான் கொடுத்த பொருள் என்னுடையது; ஈயா மல் வைத்திருந்தது இழிவாயழிந்தது என இது மொழிந்துளது. If there be any truer measure of a man than by what he does, it must be by what he gives. - [South] ஒரு மனிதனுடைய உண்மையான உயர் நிலையைச் செய லால் அறிய விரும்பின் அவனது ஈகையால் உணர வேண்டும் o என்று வண்மையின் மகிமையை இது உணர்த்தியுள்ளது. It is not enough to help the feeble up, but to support him after. [Shakespeare] இல்லாத ஏழைக்கு ஆதரவு கூறினுல் மாத்திரம் போ தாஅது; அழி பசி நீங்க அவனுக்கு நன்கு உதவி செய்ய வேண்டும் இTET ஆங்கிலப் பெருங்கவிஞர் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். வட்டி முதலிய வரவு வழிகளில் கம்பனத்தை விட்டுப் பொருளை ஆவலோடு பெருக்கிக் களிப்பது செல்வர் இயல்பு; அந்த இயல்பான நிலையை நோக்கி இந்த உயர்வான உபாயத் தைத் தேவர் இங்கே இங்கனம் விநயமாய் உாைத்துள்ளார். யாருக்கும் ஈயாத ஒரு உலோபி, பொருளாசையில் பெரிய மருளய்ைப் பெருகி கின்ருன்; அவனே ஒருநாள் ஒரு சாது பார்த் கார். அப்பா! உன் பொருளை அதிகமாப் பெருக்கிக் கொள்ள ஒரு நிதி நிலையம் புதிதாய் வந்துள்ளது; நீ மாங்காய் அளவு கேப்பைக் களி கொடுத்தால் உனக்கு மீண்டு தேங்காய் அளவு நல்ல சொக்கத் தங்கம் கிடைக்கும்” என்று அவர் நயமாய்ச் சொன்னர். அவன் உள்ளம் உவந்தான்; எல்லாம் கொடுக்கான். அந்த அதிசய வழியில் இந்த மொழி துதியாய் வந்துள்ளது.