பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1039. கன் பொருள் என்றும் அழியாமல் ஒன்று பலவாய்ப்பெருகி வாவுரிய பெரிய சேமகிகி நிலையம் வறியவர் வயிறே என்பதை மனிதன் அறிய வேண்டும். ஒருவன் என்றது உய்ர்ந்த பிறப்பில் பிறந்துள்ள அருமை தெரிய. ஒன்று என இழிந்த பிராணியாய்க் கழிந்து போகாமல் உணர்வுடைய உயர் பிறப்பில் வந்துள்ள ஒடு வன் தன் உயிர்க்கு உறுதி கலனைச் செய்து கொள்ள உரியவன். அற்ருர் பசி வயிற்றில் அன்னம் இடின் அது அதிசய சொன்ன மாய் மாறி வருகிறது. பொருளைச் சேமமாய்ப் பாதுகாத்து வைக்கும் இடம் கேமமாய்த் தெரிய வந்தது. அற்ருர்க்கு உத வினவன் வற்ருத செல்வவானுய் என்றும் வளம் பொருங்தி வாழ். கின்ருன். அவ்வாறு ஆற்ருதவன் அவமாய் விழ்கின்ருன். அற்ருர்க்குஒன்று ஆற்ருதான் செல்வம் மிகநலம் பெற்ருள் தமியள்மூத் தற்று. (குறள், 1007) அற்ருர்க்கு உதவாதவன் செல்வம் அவலமாய் இழிந்து கழி வதை இங்ஙனம்தெளிந்து கொள்ள மொழிந்துள்ளார்.அழகான பருவ மங்கையை கக்க,கருணத்தில் உரிய ஒருவனுக்குக் கொடுத் தால் கொண்டவனும் கொடுத்தவனும் பெருமை யுறுகின்ருர்; அக்க மங்கை பும் மணமகனுக்கு மனைவியாய்மக்களுக்குக் காயாய் காட்டுக்கு நன்மையாய் கலம் பலபுரிகின்ருள். கொடாதுகின்ருல் குமரியாயிருந்து வீணே மூத்து யாதொரு பயனுமின்றி எல்லாக் சுகங்களையும் இழந்து அவமே அவள் இழிந்து கழிந்து போகிருள். வறியவரான உரியவர்க்குப் பொருளை வழங்கின் ஈந்தவனும் ஏற்றவனும் மகிழ்ச்சியுறுகின்ருர். அந்த இனிய பொருள் புகழை யும் புண்ணியத்தையும் பயந்து தன்னைத் கந்தவனுக்கு அந்தமில் இன்பத்தை அருளுகின்றது. வழங்காத பொருள் இந்த கலங். களை எல்லாம் வறிதே இழந்து பாழாய் அழிந்து போகிறது. அற்ருர் அழிபசி தீர்த்தவன் பொருளை இங்கே சேமமாக் காட்டியருளிய தேவர் அவ்வாறு ாோதவன் செல்வத்தின் அவல நிலையை அங்கே இவ்வாறு காட்டியுள்ளார். இரண்டுக்கும் உள்ள வேற்றுமைகளையும் மொழி மாற்றங்களையும் உவமக் குறிப்புகளை யும் ஊன்றி உணர்ந்து ஒர்க் து தேர்ந்து கொள்ளவேண்டும்.