பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104.4 திருக்குறட் குமரேச வெண்பா யாதும் கோயாமல் யாண்டும் இன்பமாய் வாழலாம் என் இதில் அறிகின்ருேம். மன்னுயிர் மகிழ வாழ்வதே வாழ்வாம். கனக்கு யாதொரு துயரமும் நேராமல் எவ்வழியும் சுக மாய் வாழ வேண்டும்என்றே மனிதன் யாண்டும் எண்ணுகிருன். அந்த எண்ணம் எளிதே நிறைவேற வுரியஇனியவழி இங்கேவிழி தெரிய வந்தது. ஊட்டி உண்பவன் உயர் கதியுறுகிருன். உண்ணும் உணவால் உயிர்கள் வாழ்ந்து வருகின்றன; உணவு இல்லையேல் பசியால் வருக்கி அவை மாய்ந்து படும். அவ் வாறு மாயாதபடி உயிர் அமுதமான உணவை ஊட்டி வருபவன் உயர்க்க கருமத்தை ஈட்டி ஒளி மிகுந்து சிறந்து வருகிருன். அந்தப் புண்ணியவாவை ஈண்டு எண்ணியுனா வந்துள்ளோம். தானே தனித்து உண்ணுமல் பிறர்க்குப் பகுங் துதந்துஉண் பது பாத்தாண் என வந்தது. இவ்வாறு உண்ணுகின்றவன் புண் ணிையவான் ஆகின்ருன். ஆகவே அவன் எவ்வழியும் இன்பமாய் வாழநேர்கின்ருன். அன்பு கனிக்கது இன்ப வாழ்வாகிறது. பழி அஞ்சிப் பாத்துண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். (குறள்,44) பாத்தாண் உடையவனது மரபு வழிவழியே விழுமிய கிலே யில் செழித்துத் தழைத்து வரும் என முன்னமும் இங்கணம் உணர்க்கியுள்ளார். இந்த அன்னதானம் இன்னல் யாவும் நீக்கித் தன்னையுடையான அதிசய இன்ப நிலையில் உயர்த்தியருளும் என்பதை இங்கே நன்கு ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். நீர்அறம் நன்று நிழல் நன்று தன் இல்லுள் பார்.அறம் நன்று பாத் துண்பானேல்- பேரறம் நன்று தளிசாலே நாட்டற் பெரும்போகம் ஒன்றுமாம் சால வுடன். (சிறுபஞ்சமூலம்63) பிறர்க்கு ஈந்து உண்பான் பேரமம் உடையளுய்ப் பேரின் பத்தை அடைவான் எனக் காரியாசான் இங்கனம் கூறியுள்ளார். பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங்கு இல்லற முட்டா தியற்றலும்- வல்லிதின் தாளின் ஒருபொருள் ஆக்கலும் இம்மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலே. (திரிகடுகம்,31).