பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1046 திருக்குறட் குமரேச வெண்பா அரண்மனையில் உள்ள அாசிகளைப் போல் அதிகம் உணவு ஈவது அருமையாயினும் சிறிது அன்னம் இடுங்கள்; அதுபொன் மலைபோல் உங்களுக்கு அரியபல நன்மைகளை பெரிய தன்மை களையும் அருளும் என இது பொருளுடன் குறித்துள்ளது. கடைநின் றவர்உறு கண்கண்டு இரங்கி உடையதம் ஆற்றலின் உண்டி கொடுத்தோர் படைகெழு தானைப் பல்களி யானைக் குடைகெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே. (சூளாமணி) பிறர்பசி தீரச் சிறிது உண்டி கொடுத்தாலும் பின்பு அவர் பெரிய அரசராய் வருவர் என இது உரைத்துளது. அயலார்க்கு அன்னம் ஈந்தவன் யாண்டும் பசிநோய் அறியாத செல்வவள முடைய மன்னர் மன்னவனுய் மாண்புயர்ந்து மருவி வருகிருன். பிறர் அருந்த உணவுதருவது உயர்ந்த பெருந்தகைமையாம். விருந்தினரும் வறியவரும் நெருங்கி அண்ம மேன் மேலும் முகமலரும் மேலோர் போலப் பருந்தினமும் கழுகினமும் தாமே புண்ணப் பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின்! பார்மின்: (கலிங்கத்துப்பரணி,கள ம்6) - போர்க்களத்தில் வீரர்கள் இறந்துபட விழ்ந்தனர்; பருந்து களும் கழுகுகளும் வந்து அவர்தம் உடல்களில் உள்ள கசைகளை வேகமாய் உண்ணுகின்றன. காம் சாக நேர்ந்தாலும் பிறவுயிர் களின் பசிநீங்க உதவிபாய் அமைந்தோமே! என்ற மகிழ்ச்சியால் அவர் முகங்கள் மலர்ந்தன; விருந்தினரும் வறியவரும் வந்து தம் இல்லில் உண்ணுவதை நோக்கி உள்ளம்களிக்கும் வள்ளல் கள் முகம்போல் அவருட்ைய வகனங்கள் பொலிந்து விளங்கின். இந்த உபகார சீர்மைகள் இங்கே ஒர்ந்து சிங்கிக்க வுரியன. அன் அறிருந்த தமிழ்மக்களையும் இன்று உள்ளவர்களையும் நேரே எண் னிகோக்குகின்ருேம். நெஞ்சம் பரிந்து வருங்துகின்ருேம். அரிய பெருந்தன்மைகள் அருகிச்சிறிய புன்மைகள் பெருகியுள்ளன. மருவியவன் என்பது மரீஇயவன் என அளபெடுத்து கின் அறது. இது சொல்லிசை அளபெடை. மருவுதல் = உரிமையாய்ப்