பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1054 திருக்குறட் குமரேச வெண்பா இவ்வாறு அக் கவியாசி பாடிப் போனுள். போகவே இவ அனுடைய பொருள்களும் வேகமாய்த் தேய்ந்து போயின. வயதும் முதிர்ந்தது; முடிவு காலம் நெருங்கியது. சாக நேர்க்க போது தனது வாழ்வை கினேந்து பரிந்து வருங்கினன். வாழ்ந்தநாள் அடுத்த வீடு வாழ்வுற வாழ்ந்தேன் அல்லேன் ; சூழ்ந்துள கிளையை யூட்டிச் சுற்றமும் வளர்த்தேன். அல்லேன்; தாழ்ந்துள குடும்பம் ஏனும் தாங்கினேன். அல்லேன்; முன்னுள் விழ்ந்துள தருமம்ஏனும் மேலுற வளர்த்தேன் அல்லேன். து சிலார் தமக்குத் தூசு சொன்னமில் லார்க்குச் சொன்னம் ஆசறப் பசித்தோர்க்குஅன்னம் ஆகிலும் அளித்தேன் அல்லேன் ஊசியில் வாசி பார்த்தேன் ஒருபிடி அமுதுஎன் ருலும் பேசும்என் மனது கூடிப் பிச்சையிட்டு உண்டேன் அல்லேன். கட்டினேன் அல்லன் ஏனும் கடவுள் ஆலயங்கள் போற்றி ஒட்டியோர் வலம்வந்தில்லேன் உண்ணு நீர்க் குளங்கள்கூவல் வெட்டினேன் அல்லேன் பொல்லேன் விண் பொருள் விளைத் (தேன் இப்பால் முட்டினேன் குனிந்தென் செய்கேன்? மொழியநா வெழும்பா (தந்தோ! இன்னவாறு பன்னிப் புலம்பிப் பரிதாபமாய்ச் செத்தான். ஈந்து உவந்து வரும் இன்பத்தை அறியாதவர் பொருளை விணே பரிந்து பற்றிப் பின்பு இழந்து துன்பமாய் இழிந்து அழிந்து ஒழிவர் என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து நின்றது. ஈந்தான் அமுதுண்டான் ஈயாதான் கஞ்சுண்டு வீந்தான் வறிதே விரைந்து. ஈந்து இன்பம் பெறுக. 229. என்றும் பலர்சூழ்ந் திருந்துண்ன ஏன் உண்டான் குன்றையூர் எல்லன் குமரேசா-கன்றி இரத்தலின் இன்னுது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். (9) இ-ள் குமரேசா! தான் முயன்று ஈட்டியதைப் பலர்க்கும் இதமாய் உவந்து ஊட்டி ஏன் எல்லன் உண்டான்? எனின், நிரப்பிய தாமே தமியர் உணல் இரத்தலின் மன்ற இன்னுது என்க.