பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1058 திருக்குறட் குமரேச வெண்பா 230. ஈதலியை யாமைக்கேன் இன்னுயிரும் நீக்கநின்ருர் கோதறுகா ளத்தி குமரேசா-பூதலத்தில் சாதலின் இன்னத தில்லை இனிததுஉம் ஈதல் இயையாக் கடை. (10) இ-ள். குமரேசா! ஈய முடியாமையால் காளத்தியார் என் விரைந்து இறந்து டிடியத் துணிந்தார்? எனின், சாதலின் இன்னகது இல்லை; ஈகல் இயைபாக் கடை அதுவும் இனிதாம் என்க. இமத்தலினும் கொடிய துன்பம் வேறு யாதும் இல்லை; ஈயும் நிலை இசையாதாயின் அச் சாவும் இன்பமாம். ஈதலின் மகிமையைத் தெளிவா விளக்குவதற்குச் சாதகல் இணேத்து இங்ஙனம் உணர்த்தியருளினர். ஈகை உயிர்க்கு ஒகை யாய் ஒளிபுரிகின்றது. அதனைச் செய்து வரும் அளவு வாழ்வு கேசு மிகுந்து வருகிறது. செய்யாவழி மாசு படிகின்றது. சக்து உவந்து வந்தவன் இடையே ஈயமுடியாதபடி இடை ஆறு சேர்க்கால் அது அவனுக்குக் கொடிய துயரமாம். கெடிய மனவேதனையான அது மாண வேதனையினும் கடுமையாய் உயிரை வதைத்து வருததும் ஆதலால் சாதலினும் இன்னுது என்ருர். இாப்பார்க்கு ஈய இயலாமல் இருப்பதிலும் இறப்பதே இனிது என்றஇதில் மனிதவாழ்வின் புனிதநிலைபுலனுய்கின்றது. 'ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்ருது வாழ்தலிற் சாதலும் கூட்டும்.' (குறிஞ்சிக்கலி, 25) இாக்தார்க்கு ஈயமுடியாமல் வாழ்வதினும் சாவது கல்லது எனக் கபிலர் இங்ஙனம் குறித்துள்ளார். தேவர் வாய்மொழி யோடு இது ஒத்து வந்துள்ளமை உய்த்துணாத்தக்கது. உபகார ர்ேமை உயிரின் ஊதியமாய் ஒளி மிகுந்து உய்தி புரிந்து வருக லால் அதனே ஒழிய விடுவது பெரிய இழவாய் கின்றது. உய்கை பொருளா ஒருவர்க்கும் ஒருதவி செய்கை இலனேல் சிறியோன் கழித்தபகல் வைகலதுவோ வறிதே அவன் வாழ்க்கை பொய்கை மலர்ந்த கொட்டி போலும் பொலிந்துளதே. (கந்தபுராணம், காம தகனம் 47)