பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1059 பிறர்க்கு உதவியாய் உயிரை விட நேர்வர் உத்கம வள்ளல் கள்; அவ்வாறு விடின் அவர் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவர். உதவி புரியாமல் வாழும் வாழ்வு மிகவும் இழிவானது; அங்க னம் இழிவாய் வாழ்வதினும் சாவதே மிகவும் கலம் என இது குறித்துள்ளது. குறிப்புகள் கூர்ந்து சிங்கிக்க வுரியன. உபகாரிகள் ஈகையில் இன்பம் கண்டவர் ஆகலால் கம் கொடைக்குத் தடை நேர்ந்தபோது மனவேதனையால் மறுகு ன்ெருர். அந்த மறுக்கம் இறப்பினும் இன்னுமையாகிறது. மள்கலில் பெருங்கொடை மருவி மண்ணுளோர் உள்கிய பொருளெலாம் உதவி அற்றபோது எள்கலில் இரவலர்க்கு ஈவது இன்மையால் வெள்.கிய மாந்தரின் வெளுத்த மேகமே. (இராமா, கார் காலம் 104) கொடுத்து மகிழ்ந்து வந்த கொடையாளிகள் இடையே கொடுக்க இயலாதபோது உள்ளம் காணி வருங்துவதுபோல் உலகிற்கு நல்ல நீரைப் பொழிந்து வந்த மேகம் பின்பு பெய்ய இயையாமையால் வெள்.கி வெளுத்து நின்றது என இது விளக்கி யுளது. உபகார சீலருடைய உயிர் நிலை உணர நேர்ந்தது. ஈகையாளர் மேகம் போல் இனிய நீர்மையர்; கைம்மாறு கருகாமல் யார்க்கும் இதமாய் உதவி வருபவர்; இயல்பான அவ் வுபகார நிலை தடையுற கேரின் பெரிய துயரமாய் அவர் மறுகி வருந்துவர் என்பது இங்கே கன்கு தெரிய வங்கது. உடலை விட்டு உயிர் பிரிவது சாதல் ஆம். அந்த இறப்பு மிக்க துன்பமுடையது. பொறி புலன்கள் நிலைகுலைந்து கரணங் கள் யாவும் கலங்க நேர்கிற மாண வேதனை மிகவும் கொடியது. இன்னமை நிறைந்த அச் சாதலும் ஈதல் இசையாதபோது இனிமையாம். ஈயாமை கேர்ந்தால் தீய ஒரு கோயாய்த் தீராத மாய்வாய்த் தாய வண்மையாளர்க்குத் தோன்றுகிறது. ஈவது இல்லையேல் சாவது நல்லது. பிறர்க்கு இதமாய் ஈந்து வருவது கன் உயிர்க்கு நன்மை யாய் வாய்ந்து வருகிறது. புகழும் புண்ணியமும் பயந்து ஈகை புனித நிலையை அருளி வருதலால் மனிதன் அதனே இனிது