பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1062 திருக்குறட் குமரேச வெண்பா I truely enjoy no more of the world's good things than. what I willingly distribute to the needy. (Seneca) எழைகளுக்கு ஈந்து மகிழ்வதினும் இவ்வுலகப் பொருள்கள் எதனிடமும் கான் இன்பம் அனுபவித்ததில்லை என்று உரோமா புரியிலிருந்த செனிகா என்பவர் இவ்வாறு கூறியுள்ளார். புகழும் இன்பமும் புண்ணியமும் கண்ணியமாய் ஈதலில் பொருங்கி யிருத்தலால் அதனைச் செய்யாமல் கழிந்து போவது வெய்ய சாகலினும் மிகுந்த இன்னுகதாய் வேதனை விரிந்தது. இல்லை என்று இாக்கல் இழிவு; அவ்வாறு இாக்கவர்க்கு ஈயாது ஒழியின் அது கொடிய இழிவாம்; நெடிய பழியாம். ஆகவே சாவினும் பெரிய துயரமாய் மேவி நின்றது. இரவாமல் ஒன்றும் அயலோ ரிடைச்சென்று இரப்பவர்க்குக் கரவாமல் என்றும் இடரே புரியும் கடும்புலனில் பரவாமல் வெங்கை புரிவான ற்கு அன்பறும் பாதகரை விரவாமல் நின்றவர் தாமே பரகதி வேண்டினரே. (திருவெங்கைக் கலம்பகம், 82) இாப்பவர்க்கு ஈதல் இயையாதபடி கோதல் நேரலாகாது எனச் சிவப்பிரகாசர் இவ்வாறு இறைவனே வேண்டியுள்ளார். தாம் வருந்த நேரினும் பெருந்தகையாளர் எவ்வழியும் ஈந்தருளுவர். இவ் வுண்மை காளத்திவாணர்பால் காண வந்தது. ச ரி த ம் இவர் தொண்டை காட்டிலே நின்றை என்னும் ஊரில் இருந்தவர். சிறந்த உபகாரி. இனிய பல நீர்மைகள் இவர்பால் இயல்பாகவே அமைந்திருந்தன. தன்பால் வந்தவர் எவரையும் அன்போடு உபசரித்து விருந்து புரிந்து ஆதரித்து வேண்டிய பொருள்களை விழைந்து தந்து வந்தார். எவ்வழியும் யாவர்க்கும் இனிய செவ்வியராய் இவர் ஈந்து மகிழ்ந்து வருங்கால் காலவேம் அறுமையால் பஞ்சம் நேர்ந்தது; பொருள் வளம் குறைந்தது; வறுமை வளர்ந்தது; தன்னை காடி வருபவர்க்கு உரிமையோடு உதவ முடியவில்லையே என்று உள்ளம் மறுகியிருந்த இவர் ஒரு காள் அயஅாருக்குப் போயிருந்தார். இரவு ஒரு சத்திரத்தில்