பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக 1063 தங்கி யிருந்தார். விடிய ஐந்து நாழிகையளவில் ஒருவர் ஒரு பாடலைப் பாடினர். இவர்பால் பரிசில் பெறக் கருதி நின்றை யூரை நோக்கி வந்த புலவரே அங்தக் கவியை வாய்விட்டுப் பாடிக் கொண்டிருந்தார். அன்று இரவு அங்கே அவர் பாடிய வெண்பா இவருடைய டிேய புகழோடு கூடி வந்தது. அயலே வருகிறது. நீளத் தொடர்ந்துவந்தாய் நீங்கா நிழல்போல நாளேக்கு நிற்பாயோ நல்குரவே--காளத்தி நின்றைக்கே சென்றக்கால் நிஎங்கே நான் எங்கே இன்றைக்கே சற்றே யிரு. (மதுரகவிராயர்)

ஏ தரித்திரமே! நீண்ட காலமாக என்னை விடாமல் தொடர்ந்து வந்தாய்; காளை க்கு நீ கொலைக்காய்; காளத்தி வள் ளலை நான் கண்டபோது என்னை நீ காணுமல் ஒழிந்து போ வாய்!” என்று தன்னைப் பிடித்திருந்த வறுமையை முன்னிலைப் படுத்திப் புலவர் பாடியதைக் கேட்டதும் இவர் உள்ளம் உருகி மறுகினர். யாருக்கும் தெரியாமல் விரைந்து எழுங்து ஊருக்கு வந்தார்; அரிகின் முயன்று உணவு முதலியன ஆக்கி வைத்தார். புலவரும் வந்தார்; அவரை உவந்து உபசரித்து விருந்து புரிங் தார். அவருக்கு ஏதேனும் பொருள் கொடுத்து அனுப்ப வேண் டும் என்று எண்ணினர். கையில் யாதும் இல்லாமையால் வெய்ய அயரம் அடைந்தார். இல்லை என்று சொல்லுவதைவிட இறங்து விடுவதே இனிது என்று கருதி இல்லின் பின்புறத்திற்குச் சென்ருர். அங்கே யிருக்க ஒரு பாம்புப் புற்றில் கையை விடுத் தார். ஒரு பொருள் வந்தது; கையை வெளியே எடுத்தார்; ஒர் ஒளி மணியைக் கண்டார். உள்ளே யிருந்த காகம் இவ் வள்ள அக்கு உதவிய அாகனத்தைக் கண்டதும் இவர் உள்ளம் உவங் தார். அரிய அம் மணியை அப் புலவருக்கே கொடுத்தார். அவர் அதிசயமடைந்து துதிசெய்து சென்ருர். விலையிடலரிய அதனுல் விழுமிய செல்வராய் விளங்கி நின்ருர். இவரது பேருபகாரத்தை -யும் பெரு மகிமையையும் வியந்து யாவரும் புகழ்ந்தார். ஈதல் இயையாவிடின் சாதலினும் அது இன்னது என்பதை உலகம் அறிய உணர்த்திஉயர்குல வள்ளலாய் இவர் ஒளிமிகுந்துகின்ருர்.

நீளத் திரிந்தென்று வெண்பாவி லைன்று நின்றையர்கோன் காளத்தி வாணனைப் பாடிய பாடல் கருதும் அண்ட