பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1064 திருக்கு றட் குமரேச வெண்பா கோளத்தி னும் சென்று பாதாளம் புக்குக் குலவுசக்ர வாளத்தி னும் சென்ற தால் எளிதோ தொண்டை மண்டலமே. (தொண்டைமண்டல சதகம், 61) இவ் வள்ளல் சரிதத்தை இதுவும் இங்கனம் குறித்துளது. இவர் பிறந்ததே அந்த காட்டுக்குப் பெருமையாய்ச் சிறந்தது. இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தாா அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாற ேைர. (தேவாரம்) மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு உறுமா றியைவ கொடுத்தல்---வறுமையால் ஈதல் இசையாது எனினும் இரவாமை ஈதல் இரட்டி யுறும். (நாலடியார்). இரந்தார் இறந்தாரே ஈந்தாரே என்றும் நிரந்தரம் வாழ்ந்தார் நிலைத்தென்---றுரந்திகழும் முன்னேர் மொழிந்த முதுமொழியைப் பேணிநி என்னுைம் ஈதல் இனிது. ஈவானே தெய்வமாய் இன்புறுவன் ஈயாதான் சாவானே யாவன் சரிந்து. o பிறர்க்கு ஈந்து பேரின்பம் பெறுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. வறியார்க்குக் கொடுப்பதே கொடை. ஏற்றல் தீது, ஈகலே நல்லது. இல்லை என்னுமல் ஈவதே நல்ல மேன்மை. இாவலர் முகம் மலர் ஈபவர் அகம் மகிழ்வர். பிறர் பசி களையின் பெருக்கவம் விளையும். வறியர் பசி நீக்கலே அரிய பொருள் ஆக்கல். பகுங்து உண்பவன் பாக்கியவான். கொடாமல் இருப்பவர் கொடியராவர். ஈயாது உண்ணல் இரத்தலினும் இழிவு. ஈதல் இன்றி வாழ்தலினும் சாதல் இனிது. 23-வது ஈகை முற்றிற் று.