பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து நான்காவது அதிகாரம் ւ- 5 էՔ. அஃதாவது சனது குணம் செயல்களால் மனிதனுக்கு வண்டாகும் மதிப்பு. பிறர்க்கு உபகாரமாய் உதவி புரிந்து வருவ கில் இக்கக் கீர்த்தி உயர்ந்து விரிந்து எவ்வழியும் சிறந்து வரும் ஆதலால் ஈகையின் பின் இது இனமாய் இணைந்து கின்றது. 231. திண்டோள் இயற்பகைதன் தேவியையும் ஈந்தேனே கொண்டார் புகழைக் குமரேசா-தண்டாமல் ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. o (#) இ-ள். குமரேசா தனது இனிய மனைவியையும் ஈந்து இயற்பகை யார் என் இசைபெற்று கின்ருர் எனின், ஈதல் இசை படவாழ் தல் அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை என்க. எளியவர்க்கு இதமாய் ஈந்து புகழ் பொருந்த வாழ்கலாகிய அவ் வாழ்வு அன்றி உயிர்க்கு வேறு பயன் யாதும் இல்லை. உயிரின் ஊதியம் இங்கு நன்கு உனா வந்தது. உடலும் உயிரும் சேர்க்கே மனிதனுடைய வாழ்வு கடந்து வருகிறது. உண்ணல் உறங்கல் உழைத்தல் பிழைத்தல் முதலிய கிகழ்ச்சிகள் இயற்கை யாய் இயங்குகின்றன. இந்த இயக்கங்களை உணர்ச்சியோடு கடத்திவரின் அது உயர்ந்த பலனே விளைத்து வரும். ஒர்ந்து சிக்தனை செய்து ஒழுகிவரும் அளவே மனிதன் விழுமியணுய் விளங்கி வருகிருன்; அவ்வாறு ஒழுகாவழி விலங் காய் இழிந்து வீணே கழிந்து ஒழிந்து போகிருன். கணக்கு உரிய பொருளை எளியவர்க்கு இரங்கி அளியுடன் தருவது ஈதல் என எய்க்கது. இந்த ஈதலால் அவருடைய கோகல்கள் நீங்குகின்றன; அவரது வாழ்வு சுகம் அடைகிறது. பிறவுயிர்களை இன்புறச் செய்தலால் அது தன் உயிர்க்குப் பேரின்பம் ஆகிறது. ஆகவே ஈதல் உயிர்க்கு ஊதியம் எனவந்தது. ஈதல் இயையாத வாழ்வு சாதலினும் துயரமாம் என்பதை முன் அதிகாரத்தின் இறுதியில் அறிந்தோம். ஈதலையுடைய 134