பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1066 திருக்குறட் குமரேச வெண்பா வாழ்வே புனிதமானது; எவ்வழியும் இனிமையாய் மனிதனக்கு, அது மகிமைதருவது; அவ்வாறு வாழ்பவன் புகழும் புண்ணிய மும் பொருந்தி உயர்ந்து வருகிருன் என இதில் உணர்ந்து கொள்கிருேம். உதவி கலம் உயிர்க்கு உயர்கதி யருளுகிறது. சாதல்வந்து அடுத்த காலும் தனக்கு ஒரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும் காறும் புகழ் உடம்பு இருக்கும்; அந்தக் கோதறு புகழின் யாக்கை கொடையினுல் செல்வம் கூர வாழ்தலே யுடையார் அன்றே வானமும் வணங்கு நீரார். --- (விநாயகபுராணம்} கொடையினுல் வாழ்வு புகழ் ஒளி மிகுந்து உயர்நிலையடை கிறது. உம்பருலக இன்பமும் அதற்கு உரிமையாய் வருகிறது. என உபகாரியின் உயர்வை இது நயமா உணர்த்தி யுள்ளது. பிறருடைய குறைகளை நீக்கியருளுகலால் கொடையாளி எவ்வழியும் நிறை-புகழ் உடையனப் உயர்ககி அடைகிருன். இல்லா இடத்தும் இயைந்த அளவில்ை உள்ள இடம்போல் பெரிதுவந்து-மெல்லக் கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு. (நாலடியார் 91) தமக்குப் பெரிய செல்வம் இல்லை யாயினும் எளியவாைக் கண்டால் முகம் மலர்ந்து உபசரித்து இயைந்த அளவு ஈங்து வந்தால் அவர் மாந்தருள் தேவர் ஆகின்ளுர்; வானுலகம் வாயிலைத் திறந்து வைத்து அவரை ஆவலோடு எதிர்பார்த்து உரிமை கூர்ந்திருக்கிறது என்று இது குறித்துள்ளது. இாக்கமுடன் ஈபவர்க்குத் துறக்கம் உரிமையாகிறது. ஆகவே அவரது புகழும் புண்ணியமும் எண்ணியுணா வந்தன. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் எல்லே நீர் ஞாலத்து இசைவிளங்கத்---தொல்லை இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும் கரவாமல் ஈதல் கடன். (புறப் பொருள்) அருள் கனிந்த நெஞ்சினாாய்ப் பாரியும் பேகனும் ஒாறி வுடைய முல்லைக் கொடிக்கும் ஒரு பறவைக்கும் சக்து புகழ் பெற்றுள்ளனர். அவ்வுண்மையை இதில் உணர்ந்து உவந்து கொள்கிருேம். ஈதல் புரிந்து இசையுடன் வாழ்தலே உயிரின் பயன் என்பதை வள்ளியோர் சிலர் வாழ்ந்து காட்டியுள்ளனர்.