பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1070 திருக்குறட் குமரேச வெண்பா தன்னையே வியந்து, தனது நிலைமைகளையே புகழ்ந்துபேசு வதே பெரும்பாலும் மனித இயல்பாய் மருவி யுளது. தீய சுய கலமான அந்த மாயமயக்கக்கில் பிறரை யாதும் கூசாமல் இகழ் ங் து பேசுவதும் அவனுடைய வழக்கமாய் வளர்ந்து வந்துள்ளது. இழிந்த நிலையில் அழுக்கி யுழலுகின்ற இத்தகைய மனிதசமுதா யத்தில் ஈகையாளரை மாத்திரம் யாரும் வியந்து புகழ்ந்துபேசு கின்ருர். ஆகவே ஈகையின் பான்மையும் மேன்மையும் அகன் அதிசய கிலேயும் அற்புத வகையும் கன்கு அறியலாகும். பிற உயிர்களுக்கு இதமாய் உதவி புரிவதே ஈகல் ஆதலால் இந்த உபகாரிகளை யாவரும் உரிமையோடு உவந்து புகழ்ந்து வருகின்றனர். அபகாரங்கள் நிறைந்த இருளான மருள் உலகில் உபகாரம் உதய சூரியன்போல் ஒளிவீசி வருதலால் எல்லாரு டைய இதயங்களும் தாமாகவே மலர்ந்து மகிழ்ந்து கொள்ளுகி ன்றன. அந்த மகிழ்ச்சியில் புகழ்ச்சிமொழிகள் உயர்ச்சியாய்ப் பொங்கி எழுகின்றன. வாய்படைத்த மாங்கர் எல்லாரும் வள்ள ல்களை உள்ளம் உவந்து எவ்வழியும் வாழ்த்தி வருகின்றனர். நல்ல குனங்கள் பல இருப்பினும் உள்ளத்தில் உலோபம் ஒன்று இருந்தால் அந்த உலோபியை எல்லாரும் எள்ளி இகழு கின்ருர் குற்றங்கள் சில இருந்தாலும் ஈகை ஒன்று இருக்கு மானுல் அந்தக் கொடையாளியை வள்ளல் என்று உள்ளம் உவந்து யாவரும் ஆவலோடு புகழ்ந்து போற்றுகின்றனர். ஈகை யாவர்க்கும் ஒகையை விளைத்து வருதலால் அதனை யுடையவன் யாண்டும் மேலோனுய் மதிப்பும் மாண்பும் அடைந்து வாகைசூடி வருகிருன். ஈவானே தேய்வம் என்ற தல்ை அதன் திவ்விய நிலைமையும் செவ்விய தலைமையும் தெரிய நின்றன. வெய்ய குரல்தோன்றி வெஞ்சின வே றுட்கொளினும் பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்---வையத்து இருள்பொழியும் குற்றம் பலஎனினும் யார்க்கும் பொருள்பொழிவார் மேற்றே புகழ். (தண்டி) இடி மின்னல்கள் மருவி யிருந்தாலும் மழை பொழியும் மேகத் தை உலகம் போற்றி வரும்; அதுபோல் குறைகள் சில இருப்பி லும்பொருள்பொழியும்ஈகையாளர்மீதே புகழ்மொழிகள் நிலவி