பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1071 வரும்; அவரையே யாவரும் தேவர் என வியந்து புகழ்ந்து கூறி வருவர் என இது கூறியுளது. ஒப்பு கிலையை உய்த்துனருக. ஒன்ருக நல்லது உயிர் ஒம்பல் ஆங்கதன்பின் நன்ருய்ந் தடங்கிர்ைக்கு ஈத்துண்டல்---என்றிரண்டும் குன்றப் புகழோன் வருகென்று மேலுலகம் நின்றது வாயில் திறந்து. (அறநெறிச்சாரம் 63) புகழ் விளைந்து வரும் கிலேயும், அதனையுடையவன் அடை யும் கதியும் இங்கே தெரிய வந்துள்ளன. ஈகையால் இவ்வுலகில் கிலைத்த புகழும் மறுமையில் இன்ப உலகமும் எய்தலாகும். கடாவுக பாகதேர் காரோடக் கண்டே கெடா அப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல் படாஅ மகிழ்வண்டு பாண் முரலும் கானம் பிடா அப் பெருந்தகை நன்கு. (கார் நாற்பது 32) அழியாக புகழை விரும்பிய செல்வர் உள்ளம் ஈகையில் உவக்கிருக்கும் என்று கண்னங் கூத்தனர் இங்ஙனம் கூறியுள் ளார். மன்னுயிர் மகிழத் தன் உயிர் உவந்து திகழ்கிறது. பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்! புலவர் புக்கில் ஆகி நிலவரை நிலி இயர் அத்தை நீயே ஒன்றே நின்னின்று வறுவி தாகிய உலகத்து நிலவன் மாரோ புரவலர் துன் னிப் பெரிய ஒதினும் சிறிய உணராப் பீடின்று பெருகிய திருவிற் பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே. (புறம், 375) - = - - ਾ। ■ 圖 :மெய்யான ஈகையை புடைய ஆய இபத் தி புரு ல! புலவாககு 扈 இனிய இன்ப நிலையம்; உன்னைப் பாடிய வாயால் வேறு ஈயா மன்னரை எமர் இனிமேல் பாடார்’ என முடமோசியார் என் அனும் சங்கப் புலவர் இங்ாவனம் ஆயைப் புகழ்ந்து பாடியுள்ளார். வள்ளல்களைப் பொதுமக்கள் வாய்வார்த்தைகளால் புகழ்ந்து உரைக்கின்றனர்; புலவர்கள் பாடல்களால் வியந்து உவந்து பாடு so கின்றனர். ஆகவே உரைப்பார் உரைகளையும் பாடுவார் பாட்டு களையும் ஈவார் புகழ்கள் எவ்வழியும் மேவி கிற்கின்றன.