பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1075 மேவலர் எமர் என் ஞமல் வெங்களம் தன்னில் நின்ற காவலன் கன்னன் கையும் பொழிந்தது கனக மாரி. (பாரதம்) சந்திரன்சுவர்க்கியும், வரபதியாட்கொண்டானும் இவ்வாறு புகழப்பட்டுள்ளனர். ஈவார் மேல் நிற்கும் புகழையே உாைப்பார் உாை எல்லாம் உவந்து போற்றி வரும் என்பதை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். ஈந்து இசையுடன் உயர்ந்து வாழுக. கொடுக்கும் கொடையே குலவு புகழைக் கொடுக்கும் குணமாக் கொணர்ந்து. வையம் புகழ வழங்கி யருளுக. 233. என்றும் சிபிசந்தன் எவ்விநள்ளி ஒரிபுகழ் குன்ருத தென்னே குமரேசா-என்றுமே ஒன்ரு உலகத் துயர்ந்த புகழல்லால் பொன் ருது நிற்பதொன் றில். (3) இ-ள். குமரேசா! சிபி சக்தன் எவ்வி கள்ளி ஒரி என்னும் இவர் புகழ் என் என்றும் கின்று நிலவுகின்றது? எனின், ஒன்ரு உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் பொன்ருது நிற்பது ஒன்று இல் என்க. அழியா ஒளி விழி தெரிய வங்தது. தலைமையான உயர்ந்த கீர்த்தியைத் தவிர வேறு யாதும் இவ் வுலகில் அழியாமல் நிலைத்து நிற்பது இல்லை. பொன்றுதல்=நிலைகுலைந்து அழிதல். அவ்வாறு அழியாக ஒன்று தெளிவாய் இங்கு நன்கு விழி தெரிய வந்துள்ளது. யாதும் நிலை யில்லாக இந்த கிலவுலகில் என்றும் கிலையாய் கிலைத்து நிற்பது புகழ் ஒன்றே. அதனை நன்முக நீ பெற்று உயர்க என மனிதனுக்கு இங்கனம் இது இனிது போதித்துளது. ஈதல் செய்; அதனுல் இசையுண்டாம்; அதனையுடைய வாழ்வே வாழ்வாம்; அவ்வாறு வாழ்பவனே வையம் எவ்வழியும் வாழ்த்தி வரும்; அவன் கிவ்விய நிலையில் உயர்ந்து சிறந்து விளங்கி வருவான்; அவனுடைய கீர்த்தி வான ஒளிபோல் வயங்கி யாண்டும் ங்லையாய் உலாவி வரும் என ஈகையின் விளைவுகளை முறையே இதுவரை நயமாய் உணர்ந்து வந்துள்ளோம்.