பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1076 திருக்குறட் குமரேச வெண்பா மணி, ஒளியால் மாண்புறுகிறது; மனிதன் புகழால் மகிமை பு:றுகிருன். சிறந்த ஒளியுடைய மணியை எவரும் விழைந்து பேணுகின்றனர்; அதுபோல் உயர்ந்த புகழுடைய மனிதனை உலகம் உவந்து போற்றுகிறது. போற்றவே உயிரினங்கள் உள்ள அளவும் அவனுடைய பேரும் சீரும் வழிவழியே வளமை யாய் வளர்ந்து வருகின்றன. வரவே என்றும் நிலையான புகழா ளனய் யாண்டும் எவ்வழியும் அவன் கின்று நிலவுகின்ருன். 'கண்ணகன் கிடக்கைக் கலிகெழும் ஊழியுள் -- = மண்ணகம் தழீஇ மன்னிய ஊழிதொறும் புண்ணிய உலகிற்கும் பொலிவுற் ருமெனத் தொன்ருேங் காளர் துணியப் பட்ட பொன்ரு இயற்கைப் புகழது பெருமை.” (பெருங்கதை 2-8) கற்ப காலம் கழிந்தாலும் கழியாமல் அம்புக நிலையில் கிம்பது; புண்ணிய வுலக இன்பம் பொருந்தத் தருவது; பொன் ருத இயல்பினையுடையது எனப் புக்ழை இது புகழ்ந்து குறித் துள்ளது. பொன்ரு இயற்கைப் புகழ் என்று தொன்றுதொட்டே முன்னேர் எண்ணித் துணிந்தது என்றது ஈண்டு எண்ணியுணா வுரியது. கொங்கு வேளிர் என்னும் காவியக் கவிஞர் தேவாை இங்ஙனம் குறித்திருக்கிருர். புகழ் ஒன்றே பொன்ருது நிற்பது என்னும் இது அவர் உள்ளத்துள் பதிந்து இவ்வாறு உருக் கொண்டு வந்துள்ளது. உண்மையை ஊன்றி ஒர்ந்து கொள்க. பிற உயிர்கள் இன்புறப் புரிவதால் ஈகையால் உயர்ந்த புகழ் விளைந்து வருகிறது. அரிய தரும நீர்மை மருவி வருதலால் இந்தப் புகழ் இருமையும் பெருமையாய் இன்பம் பயந்து என் அம் குன்ருமல் கின்று நிலவுகின்றது. தன்னைச் செய்த உடம்பு அழியினும் தான் அழியாமல் கின்று உயிர் புக்குழி எல்லாம் புகுந்து கருமம் தருவதுபோல் புகழும் இனிய சுகங்களை அருளி வருதலால் பெரிய ஆன்ம ஆகியமாய் மேன்மை சுரக்து விருேடு இது விளங்கி நிற்கிறது. சீர் பெறுகின்றவர் சீரியர் ஆகின்ருர். பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின் பற்றின்கண் நில்லாது அறம்செய்க.--மற்றது பொன்ருப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக், கன்றுடைத் தாய்போல் வரும். (அறநெறி, 60)