பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1077 பொன்ருப் புகழை நிலைநிறுத்தி உயிர்க்கு என்றும் புண்ணி யம் இன்பம் சுரங்து வரும்; அதனை விரைந்து செய்து உயர்ந்து கொள்ளுக என முனைப்பாடியார் இங்கனம் பாடியிருக்கிரு.ர். மனிதன் உடம்பு எடுத்த பயன் உயிர்க்குப் புனிதமான நன்மையைச் செய்து கொள்வதேயாம். அழியும் உடம்பைக் கொண்டு அழியாக புகழை அடைந்து கொள்பவன் விழுமிய மேதையாய் விளங்கி மேலான இன்பம் எய்தி நிற்கின்ருன். ஒருவனது இரண்டு யாக்கை ஊன் பயில் நரம்பின் யாத்த உருவமும் புகழும் என்ருங்கு அவற்றின் ஊழ் காத்து வந்து மருவிய உருவம் இங்கே மறைந்துபோம் மற்ற யாக்கை திருவமர்ந்து உலகம் ஏத்தச் சிறந்துபின் நிற்கும் அன்றே. (சூளாமணி, சீயவதை, 204) ஊன் உடம்பு ஒளி உடம்பு என இரண்டு தேகங்கள் இருக் கின்றன; ஒன்று தசை எலும்பு கோல்களால் ஆனது; மற்றது இசையால் விளைந்தது; முன்னது இங்கே மாய்ந்து மறைந்து போம்; பின்னது என்றும் மாயாமல் யாண்டும் தேயாமல் நீண்ட உருவுடன் உலகம் தொழுது போற்ற ஒளி வீசி நிற்கும் என இது உணர்த்தியுளது. கருத்தை ஊன்றி ஒர்ந்து கொள்க. ஊறுகொள் சிங்கம்போல உயக்கமோடு இருந்த நம்பி கூறினுன் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்துமற்றுன் வீறுயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி இன்னே நாறுபூங் கொம்பனுளை நோக்கென நம்பி சொன்னன். (சீவக சிந்தாமணி, பதுமை 119) உலோக பாலன் என்னும் இளவரசன் சீவகனை கோக்கி இங் நனம் கூறியிருக்கிருன். உயர்ந்த புகழ் விளையச் சிறந்த செயலைச் செய்தருள் என்று வேண்டி யிருத்தலால் அரிய கொடையால் பெரிய புகழ் உண்டாம் என்பது ஈண்டு உணர வந்தது. புகழ் எனின் உயிரும் கொடுக்குவர். (புறம், 182) இளம் பெரு வழுதி என்னும் மன்னன் இன்னவாறு கூறியுளான். ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே. (மதுரைக் காஞ்சி 205) நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் புகழை விரும்பி ஈட்டியுள்ளதை இது ஈயமா வரைந்து காட்டியுள்ளது.