பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1078 திருக்குறட் குமரேச வெண்பா களைகனத் தம் அடைந்தார்க்கு உற்றுழியும் மற்ருேர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார்---தளர்நடைய ஊனுடம்பு என்று புகழுடம்பு ஒம்புதற்கே -ானுடம் பட்டார்கள் தாம். (நீதி நெறி, 40). பிறர்க்கு உபகாரமாகக் கன் உடம்பைக் கொடுத்தேனும் புகழ் உடம்பைப் பெரியோர் பெறுவர் என இது குறித்தளது. அந்நா ரணைேடு அமர்முற் றியமுனியைப் பொன்னுடு அருளும் புலவோர் இறை இரப்ப வென்னரும் என்பு விருத்திரனுக்கா உதவித் தன்னர் உயிர்விட்ட தன்மைதனைக் கேட்டிலையோ? (கந்த புராணம், காம, 48) தன் உயிரையும் கொடுத்துக் ததீசி முனிவர் புகழை ஈட்டி யுள்ளதைத் தேவர்கள் இவ்வாறு புகழ்ந்து கூறியுள்ளனர். உபகார நிலை உயிரினங்களுக்கு யாண்டும் உவன்) அ இபை விளைத்து வருதலால் அவ்வழியில் விளைந்து வருகிற புகழ் என் அறும் அழியாமல் எவ்வழியும் விழுமிய நிலையில் ஒளி விசியுளது. கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான்---மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வன போல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு. (நீதிநெறி விளக்கம், 7). பிரமன் படைத்த உடம்புகள் அழிந்து ஒழிகின்றன; புல வர் படைத்த புகழ் உடம்பு என்றும் அழியாமல் யாண்டும் ஒளி விசி நீண்டு நின்று நெடிது நிலவுகிறது என இது குறித்துளது. மண்ணின்மேல் வான் புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்ருனும்---உண்ணும் நீர் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா உடம்பெய்தி னர். (திரிகடுகம் 16). இவ் வுலகில் உயர் புகழ் உம்றவன் என்றும் பொன்ரு உடம்பு பெற்றவன் என நல்லாதனுர் இங்கனம் உரைத்துளார். பிறந்த பிறப்பு சிறந்த சிறப்பாய் உயர்ந்து வருவது புகழா லேயாம்; அதனை மருவிய அளவு மனிதன் தெய்வமாய் மகிமை யுறுகிருன். திவ்விய வாழ்வு செவ்விய புகழுடைய காம்.